மயிலாடுதுறையில் 144 தடை உத்தரவு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

0
மயிலாடுதுறையில் 144 தடை உத்தரவு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் குட முழுக்கு விழாவையொட்டி மாவட்ட ஆட்சியர் அப்பகுதியில் 144 தடை உத்தரவை அறிவித்துள்ளார்.

144 தடை உத்தரவு:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காட்டுத்தீ போல விரைவாக பரவி வருகிறது. இதனால் மாநில அரசு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கொரோனா பரவல் நிலையை கருத்திற்கொண்டு அந்தந்த இடங்களுக்கு ஏற்ப விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. தனிநபர் இடைவெளி, முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி பயன்படுத்துதல் போன்ற விதிமுறைகளை கட்டாயம் மக்கள் பின்பற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதன் மூலம் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க முடியும் என சுகாதாரத்துறை தெரிவிக்கிறது. தமிழகத்தில் விழாக்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. மயிலாடுதுறை, சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் வருகின்ற 29ம் தேதி கோவில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.

தமிழக ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 30க்குள் ‘இது’ கட்டாயம் – பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!!

23 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற இருக்கிறது. ஆனால் தற்போது கொரோனா இரண்டாம் அலை தமிழகத்தில் அதிகமாக பரவி வருவதால் குடமுழுக்கு விழாவில் பக்தர்கள் பங்கேற்பதற்கு பேரூராட்சி தடை விதித்துள்ளது. மேலும் விழாவானது 29ம் தேதி அன்று கோவில் வளாகத்தில் தருமபுரம், ஆதீனம் முன்னிலையில் நடைபெற உள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

இதன் காரணமாக மக்கள் கூடுவதை தவிர்க்க வைத்தியநாத சுவாமி பேரூராட்சி பகுதிக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்ததரவை பிறப்பித்துள்ளரர். வருகிற 29ம் தேதி அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை உத்தரவு அமலில் இருக்கும் எனவும் ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனால் அப்பகுதியில் பாலகம், மருந்து கடை மற்றும் அத்யாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் மட்டும் தொடர்ந்து இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களின் நலன் கருதி இம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!