TNPSC குரூப் 2 தேர்வில் முறைகேடு…!! ” அதிர்ச்சி தகவல் வெளியீடு”..!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது அரசு துறையில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக போட்டித் தேர்வுகளை நடத்தி, அதன் மூலம் தேர்ச்சி பெற்ற தேர்வாளர்களை பணியமர்த்தி வருகிறது. அந்த வகையில், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற TNPSC குரூப் 2 விடைத்தாள் திருத்துவதில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, சமீபத்தில் TNPSC குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் சுமார் 5000 பேருக்கு பணி நியமிக்கப்பட்ட நிலையில், தேர்வின் விடைத்தாள் நகலை TNPSC ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. மேலும், இந்த மெயின் தேர்வு விடைத்தாள்களை இரண்டு மதிப்பீட்டாளர்கள் தனித்தனியே மதிப்பீடு செய்வார்கள். அதில், ஒரு மதிப்பீட்டாளர், 12 மதிப்பெண்களுக்கு 10 மதிப்பெண் என்றும் 2வது மதிப்பீட்டாளர் 0.5 மதிப்பெண் என்ற கணக்கில் வழங்கியுள்ளதால், தேர்வாளர்களுக்கு விடைத்தாள் நிறுத்துவதில் முறைகேடுகள் நிகழ்ந்திருக்கலாம் என்று சந்தேகங்கள் எழும்பியுள்ளன.
மேலும், இதுபோன்று சுமார் 350 தேர்வாளர்கள் மதிப்பெண்களில் முறைகேடுகள் இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

























