“கனடா அமெரிக்காவாக மாறாது”.. கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி அதிரடி பேச்சு..
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து கனடா பொருளாதார ரீதியாக பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகிறது. மேலும், கனடாவின் பிரதமராக ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி மாதம் 7-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் புதிதாக பதவியேற்க உள்ள கனடாவின் பிரதமர் பற்றி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, “கடந்த 2008 முதல் 2013-ம் ஆண்டு வரை கனடா வங்கியின் 8-வது ஆளுநராகவும், 2011 முதல் 2018-ம் ஆண்டு வரை நிதி நிலைத்தன்மை வாரிய தலைவராக பதவி வகித்த மார்க் கார்னி கனடாவின் 24 வது பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், வெற்றி அறிவிப்பிற்கு பின்னர் பேசிய அவர் அமெரிக்காவின் ஒரு பகுதியாக கனடா ஒருபோதும் மாறாது என்றும், அமெரிக்க தடையற்ற வர்த்தகத்தை மேற்கொள்ளும் வரை பதிலடி நடவடிக்கைகள் தொடரும் என்று கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்”.



























