
மூன்றாவதாக பிறக்கும் குழந்தைகளுக்கு அரசின் சிறப்பு சலுகை….ஒரு கன்றுடன் கூடிய பசு மாடு, ரூ. 50,000 வழங்க திட்டம்
இந்தியாவில் மக்கள் தொகை தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆந்திராவின் தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த விஜயநகர நாடாளுமன்ற எம்.பி அப்பலா நாயுடு, சர்வதேச மகளிர் தின சிறப்பு விழாவில் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, “தனது தொகுதியில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தால், நிலையான வைப்புத் தொகையாக ரூ. 50,000 வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மார்ச் 12 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…ஏன் தெரியுமா…??
மேலும், “இந்த நிலையான வைப்பு தொகை பிறந்த பெண் குழந்தையின் 21 வது வயதில் ரூ. 10 லட்சம் வரை கூட்டு தொகையாக கிடைக்கும் வகையில் திட்டமிட்டுள்ளதாகவும்” அறிவித்துள்ளார். இதையடுத்து, “தனது தொகுதியில் மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தால், ஒரு பசு மாடு மற்றும் கன்று பரிசாக வழங்க உள்ளதாகவும்” அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு, முன்னதாக ஆந்திராவில் 5 ,6 மற்றும் அதற்கு மேல் குழந்தைகளை பெற்றால், சிறப்பு சலுகைகள் உண்டு என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்ததை தொடர்ந்து, தற்போது இவர் வெளியிட்ட அறிவிப்பால், ஆந்திர மக்களிடையே நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


























