மனோன்மணியம் பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு., வெளியான முக்கிய அறிவிப்பு!!
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தென் மாவட்டங்களில் ஒரு முக்கியமான பல்கலைக்கழகமாகும். இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் 106 கல்லூரிகள் இயங்கி வருகின்றன. தற்போது இந்த கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது.
அரசு கலைக் கல்லூரியில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு., வெளியான முக்கிய தகவல்!!
இந்நிலையில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நடக்கவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது ‘இன்டஸ்ட்ரியல் லா’ தேர்வின் வினாத்தாள் கசிந்ததாக வந்த தகவலை அடுத்து தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு மாணவ மாணவிகள் தயாராகி வந்த நிலையில், கடைசி நேரத்தில் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்தனர்.


























