தமிழகத்தில் சிறந்த மகளிர் குழுக்களுக்கு “மணிமேகலை விருது” – அமைச்சர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் சிறந்த மகளிர் குழுக்களுக்கு
தமிழகத்தில் சிறந்த மகளிர் குழுக்களுக்கு "மணிமேகலை விருது" - அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் சிறந்த மகளிர் குழுக்களுக்கு “மணிமேகலை விருது” – அமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் சிறந்த மகளிர் குழுக்கள், உள்ளாட்சி அமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு ‘மணிமேகலை விருது’ வழங்க இருப்பதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் அவர்கள் அறிவித்து உள்ளார்.

மணிமேகலை விருது:

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் சில நாட்களுக்கு முன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த மூன்று நாள் விடுமுறைக்கு பிறகு திங்கள் கிழமையான நேற்று தொடங்கி அதன் தொடர்ச்சியாக, இரண்டாம் நாளான இன்று, சட்டசபை கூட்டத்தொடர் முதல்வர் மற்றும் சபாநாயகர் முன்னிலையில் தொடங்கியது. நேற்று துறை ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது. இதில் சபை முன்னவர் துரைமுருகனை பாராட்டி தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தகுந்தது.

செப். 14ல் பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆஜராக வேண்டும் – சென்னை நீதிமன்றம் உத்தரவு!

இன்று உள்ளாட்சி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இது குறித்து விளக்கம் தர எழுந்து பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் அவர்கள் ஒரு அறிவிப்பினை முன்வைத்தார். அதில் அவர் கூறியதாவது, மாநில மற்றும் மாவட்ட அளவில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், கிராமப்புற வளர்ச்சி மேம்பாட்டு மையங்கள், ஊரக வளர்ச்சி சங்கங்கள் போன்ற அனைத்து குழுக்களுக்கும் அவர்களது சேவை மற்றும் செயலை பாராட்டி விருது வழங்கி பெருமை படுத்தப்படுவார்கள்.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில் தற்போது, சிறந்த அமைப்பு சங்கங்களுக்கு ஊரக வளர்ச்சி துறை மற்றும் தமிழக அரசு சார்பாக “மணிமேகலை விருது” விருது வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த விருதுகளில் மாநிலம் சார்ந்த விருதுகளில் 5 ஊராட்சி அமைப்புகளுக்கு ரூ.3 லட்சம், 10 சிறந்த குழுக்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் மற்றும் விருதும் வழங்கப்படும். இதே போல் மாவட்ட அளவில் ஒரு சிறந்த ஊராட்சி அமைப்புக்கு ஒரு லட்சமும், 3 குழுக்களுக்கு தலா ரூ.25,000 உடன் விருதும் வழங்கப்படும். இந்த விருதுக்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!