
மாணவர்களுக்கு குட் நியூஸ்..தமிழ்நாட்டில் கட்டாய தேர்ச்சி முறை தொடரும்…!! ” பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு”..!!
இந்திய அரசானது பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், 5 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இருக்கும் கட்டாய தேர்ச்சி நடைமுறையானது அவர்களின் கல்வித்திறனை பெரிதளவில் பாதிப்பதால், மத்திய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு அந்த நடைமுறை ரத்து செய்யப்படுவதாக நேற்று(டிசம்பர் 23) மத்திய கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். மேலும், இந்த நடைமுறையை மாநில பள்ளிகளில் அமல்படுத்துவது தொடர்பாக அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்து கொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தனர்.
அந்த வகையில், தற்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்ததாவது “கல்வி உரிமை சட்டத்தில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள திட்டங்களால் தமிழ்நாட்டு பள்ளி தேர்ச்சி முறையில் என்ற மாற்றமும் இல்லை. தற்போது 5 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள கட்டாய தேர்ச்சி நடைமுறையே தொடரும்” என தெரிவித்துள்ளார்.


























