பள்ளிகளை திறந்தாலும் மாணவர்களை அனுப்ப தயாராக இல்லை – பெற்றோர்கள் கருத்து!!

0
பள்ளிகளை திறந்தாலும் மாணவர்களை அனுப்ப தயாராக இல்லை - பெற்றோர்கள் கருத்து!!
பள்ளிகளை திறந்தாலும் மாணவர்களை அனுப்ப தயாராக இல்லை - பெற்றோர்கள் கருத்து!!
பள்ளிகளை திறந்தாலும் மாணவர்களை அனுப்ப தயாராக இல்லை – பெற்றோர்கள் கருத்து!!

கொரோனா நோய் அச்சம் காரணமாக பள்ளிகள் மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டு வருகின்றன. பொதுத்தேர்வு நெருங்கி வரும் நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. 80% பெற்றோர் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கியுள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்ட பெற்றோர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

பள்ளிகள் திறக்க பெற்றோர்கள் எதிர்ப்பு:

தமிழகத்தில் பள்ளிகள் கொரோனா நோய் அச்சம் காரணமாக மூடப்பட்டு 9 மாதங்கள் முடிவடைந்த நிலையில் பொதுத்தேர்வு நெருங்குவதால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்க பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டுள்ளன. இதில் 80% பெற்றோர்கள் பள்ளிகள் திறக்கலாம் என்று அறிவித்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளை திறக்க ஏற்பாடு செய்து வருகிறது.

தமிழக அரசுக்கு ‘ஜாக்டோ ஜியோ’ அமைப்பினர் கோரிக்கை!!

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 264 பள்ளிகளில் பெற்றோர்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் கலந்து கொண்டு பள்ளிகளில் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களில் பெயர், மாணவர்களின் வகுப்பு மற்றும் காரணம் உள்ளிட்டவற்றை பூர்த்தி செய்ய அறிவுறுத்தப்பட்டது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறந்தாலும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப போவதில்லை என்று தெரிவித்தனர்.

ரூ.2 லட்சம் சம்பளத்தில் சென்னை துறைமுக வேலைவாய்ப்பு !

இது குறித்து மாணவர்களின் பெற்றோர் ஒருவர் கூறுகையில், “கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையிலும் உருமாறிய கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் இத்தனை நாள் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்ததற்கு அர்த்தம் இல்லாமல் போய்டும். மேலும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்து மக்கள் பயன்பாட்டிற்கு வந்த பிறகு பாதிப்பு ஏதும் இல்லை என்று அறிந்த பின்பு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம்” என தெரிவித்தனர்.

TNPSC இந்தியாவின் முக்கிய இயற்கையமைப்பின் பிரிவுகள் – Tnpsc Geography Physical Features India Tamil

ஒரு சில மாணவர்களின் பெற்றோர் மாணவர்கள் கல்வி மீது அக்கறை இல்லாமல் டிவி, செல்போன் என நேரத்தை செலவிடுவதாக விரைவில் அனைத்து பள்ளிகளையும் திறக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். பெற்றோர்களின் இந்த கருத்துகளை தொகுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தினர் வாயிலாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!