10 ரூபாய் காசு செல்லுமா ? செல்லதா? RBI விளக்கம்!
ரிசர்வ் வங்கி கடந்த 2009-ம் ஆண்டு 10 ரூபாய் நாணயங்களை அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து 2017-ம் ஆண்டு வரை 14 முறை 10 ரூபாய் நாணயங்களை வெளியிட்டது. ஆனால் 10 ரூபாய் நாணயம் வெளியானதிலிருந்து இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் நாணயம் செல்லாது என்ற வதந்தி பரவி வருகிறது. பல இடங்களில் 10 ரூபாய் நாணயங்கள் வாங்கப்படுவதில்லை என்பதால், பொதுமக்கள் கடும் சிரமம் அடைகின்றனர்.
ரயிலில் பயணம் செய்ய போறீங்களா? இது கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க மக்களே!
இந்த நாணயம் செல்லாது என இதுவரை ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ரூ. 10 நாணயங்களை எடுக்க மறுப்பது குற்றமாக கருதப்படும் என ரிசர்வ் வங்கி ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதனை தொடர்ந்து தற்போது ரூ.10 நாணயங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை இந்தியன் வங்கி மேற்கொண்டுள்ளது. ரூ.10 நாணயங்கள் வாங்க மறுப்பதன் காரணமாக சந்தையில் இந்த நாணயங்களின் சுழற்சி வெகுவாக குறைந்துள்ளது. அதேபோல் சந்தையில் ரூ.10 நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



























Hi good morning