மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை எதிர்த்து மனு தாக்கல் – உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

0
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை எதிர்த்து மனு தாக்கல் - உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை எதிர்த்து மனு தாக்கல் - உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை எதிர்த்து மனு தாக்கல் – உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தடை செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தற்போது இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

உரிமைத் தொகை திட்டம்:

தமிழகத்தில் பெண்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் நோக்கிலும் அவர்களின் வாழ்க்கை தரம் மேம்பட உதவிடும் வகையிலும் மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 1 கோடியே 63 லட்சம் குடும்ப தலைவிகள் பயனடைந்து வருகின்றனர். மேலும் பலர் மேல்முறையீடு செய்துள்ளனர். தற்போது புதிதாக 7.35 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். மேல்முறையீடு செய்தவர்களுக்கு கடந்த 3 மாதத்தொகையும் மொத்தமாக சேர்த்து வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மீண்டும் தக்காளி விலை உயர்வு – கனமழை எதிரொலி!

இந்த நிலையில் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தமிழக அரசு ஏற்கனவே கடனில் உள்ளது. இந்த சூழலில் இது போன்ற உரிமை தொகையை திட்டம் கொண்டு வந்தால் மேலும் கடன் சுமை அதிகரிக்கும். அதனால் இத்திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்க மறுத்து தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!