மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் Research Assistant வேலை – கல்வி தகுதி, ஊதியம் குறித்த முழு விவரங்களுடன்!
மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Research Assistant – A பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடத்தை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.37,000/- மாத ஊதியம் வழங்கப்படும். ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
University of Madras காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Research Assistant – A பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடத்தை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Research Assistant கல்வி தகுதி:
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBA தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
University of Madras வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Sainik School-ல் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!
Research Assistant ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.37,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.
University of Madras தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 09.08.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


























