மெட்ராஸ் தினம் 2021 – இன்று முதல் கோலாகல கொண்டாட்டம்! வரலாற்று உண்மைகள்!

0
மெட்ராஸ் தினம் 2021 - இன்று முதல் கோலாகல கொண்டாட்டம்! வரலாற்று உண்மைகள்!
மெட்ராஸ் தினம் 2021 - இன்று முதல் கோலாகல கொண்டாட்டம்! வரலாற்று உண்மைகள்!
மெட்ராஸ் தினம் 2021 – இன்று முதல் கோலாகல கொண்டாட்டம்! வரலாற்று உண்மைகள்!

தமிழகத்தின் தலைநகரான சென்னை நகரின் தினமான மெட்ராஸ் டே தொடர்ந்து ஒரு வாரத்திற்கு கொண்டாடப்பட உள்ளது. இதற்காக சென்னை மாநகராட்சி பல ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

மெட்ராஸ் டே:

இந்தியாவில் வணிக வர்த்தகம் செய்ய வந்த ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனி, வந்தவாசியை ஆண்டு வந்த தாமல் வெங்கடப்ப நாயக்கரிடம் இன்றைய தலைமை செயலகம் உள்ள கோட்டை பகுதியை 1639-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ல் பெற்றனர். இதனால் இந்த பகுதி தாமல் வெங்கடப்ப நாயக்கரின் தந்தை சென்னப்ப நாயக்கர் நினைவாக சென்னை பட்டினம் என்று அழைக்கப்பட்டது. அப்போதைய காலத்தில் சாந்தோம் பகுதியில் துறைமுகம் உருவாக்கப்பட்டு மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது.

பெட்ரோல், டீசல் விலை – 35 நாட்களுக்கு பிறகு சரிவு! 5 மாநில தேர்தல் காரணமா?

அதன்பின்னர், ஆங்கிலேயர்களால் சென்னை மெட்ராஸ் மாகாணமாக விரிவடைந்தது. தமிழில் சென்னை, மதராஸ், மெட்ராஸ் என்று கூறப்பட்டது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டு வந்த சமயத்தில் தற்போதைய ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் ஒடிஷாவின் பகுதிகள் அனைத்தும் மதராஸ் மாகாணமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நாடு சுதந்திரம் பெட்ரா பிறகு மொழி வரையாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது மெட்ராஸ் மாகாணம் என்றே அழைக்கப்பட்டது. அண்ணாவின் ஆட்சி காலத்தில் மெட்ராஸ் மாகாணத்தின் பெயர் தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

கலைஞர் ஆட்சி காலத்தில் 1996-ம் ஆண்டு ஜூலை 17 முதல் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் சென்னை என்று அழைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2004ம் ஆண்டு முதல் மெட்ராஸ் டே கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை நகரம் தற்போது 382 வது வயதை அடைந்திருக்கிறது. மெட்ராஸ் டே வை கொண்டாடும் விதமாக சென்னை மாநகராட்சி நிர்வாக கட்டிடமான ரிப்பன் மாளிகை, மாநகராட்சியின் கீழ் உள்ள கடிடடங்கள், காப்பகங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

தமிழக மக்கள் கவனத்திற்கு – முதல்வர் முக ஸ்டாலின் அறிவுறுத்தல்!

இதற்காக சென்னை மாநகராட்சி பல சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. பல போட்டிகள் நடத்துவதற்கு சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை பெருநகரின் அடையாளத்தை குறிக்கும் சிற்பங்களை தயார் செய்து வரும் இன்று முதல் 28-ந்தேதிக்குள் ரிப்பன் மாளிகையில் உள்ள சீர்மிகு நகர திட்ட அலுவலகத்தில் வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பூங்காக்கள், நீர்நிலைகளில் உள்ள பறவைகளை புகைப்படம் எடுத்து சென்னை மாநகராட்சியின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்வதற்கு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!