லக்னோ- சிஎஸ்கே கேப்டன்களுக்கு ரூ.12 லட்சம் அபராதம் – காரணம் இது தான்!

0
லக்னோ- சிஎஸ்கே கேப்டன்களுக்கு ரூ.12 லட்சம் அபராதம் - காரணம் இது தான்!

2024 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் சிஎஸ்கே கேப்டன் மற்றும் லக்னோ அணி கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அபராதம் விதிப்பு

ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 19)  33வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் சிஎஸ்கே மற்றும் லக்னோ அணிகள் மோதியது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணியை லக்னோ அணி தோற்கடித்தது. இந்நிலையில் சிஎஸ்கே அணி நடந்த 7 போட்டிகளில் 3 போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.

வங்கி விதிமுறைகளில் அதிரடி மாற்றம் – உயர்த்தப்பட்ட கட்டணங்களின் பட்டியல் இதோ!

அதே போல லக்னோ அணி நிர்ணயித்த நேரத்தில் 20 ஓவர்களை வீசி முடிக்கவில்லை. அதனால் லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுலுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதே போல லக்னோவுக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களை வீசி முடிக்கவில்லை. எனவே சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கைக்வாட்க்கும் ரூ.12 லட்சம் சம்பளத்தில் இருந்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!