வங்கி விதிமுறைகளில் அதிரடி மாற்றம் – உயர்த்தப்பட்ட கட்டணங்களின் பட்டியல் இதோ!

0
வங்கி விதிமுறைகளில் அதிரடி மாற்றம் - உயர்த்தப்பட்ட கட்டணங்களின் பட்டியல் இதோ!

Yes வங்கி மற்றும் ICICI வங்கிகளானது தங்களது சேவைகளுக்கான கட்டணத்தை தற்போது உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்கள் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

உயர்த்தப்பட்ட கட்டணங்கள்:

Yes வங்கி மற்றும் ICICI வங்கிகளானது தனது பயனர்களுக்கான புதிய அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி, இவ்வங்கிகளில் தொடங்கப்பட்ட சில கணக்குகள் வங்கியின் விதிமுறைக்கு கட்டுப்படாததால் மூடப்பட்டுள்ளது. மேலும் இவ்விரு வங்கிகளும் தங்களது சேமிப்புக் கணக்குகளின் சேவைக் கட்டணங்களில் சில மாற்றங்களை செய்துள்ளது. அதாவது மினிமம் பேலன்ஸ் (AMB) கட்டணங்கள் சேமிப்புக் கணக்குகளின் வகைகளுக்கு ஏற்ப உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் அனைத்தும் மே 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

கிரெடிட் கார்டு பயன்படுத்தும் நபரா நீங்கள்? – இனி ‘இந்த’ பில்களை கட்ட தடை!

Yes வங்கியானது தனது புரோ மேக்ஸ் சேமிப்புக் கணக்கில் அதிகபட்சமாக ரூ.1000 கட்டணத்துடன் மினிமம் பேலன்ஸ் ரூ. 50,000 என்றும் , புரோ பிளஸ் சேமிப்புக் கணக்கு, யெஸ் எசென்ஸ் சேமிப்புக் கணக்கு மற்றும் யெஸ் ரெஸ்பெக்ட் சேமிப்பு கணக்குகளில் அதிகபட்சமாக ரூ.750 கட்டணத்துடன் ரூ.25,000 மினிமம் பேலன்ஸ் என்றும், புரோ சேமிப்பு கணக்கில் அதிகபட்ச கட்டணம் ரூ. 750 உடன் மினிமம் பேலன்ஸ் ரூ. 10,000 என்றும், சேமிப்பு மதிப்பு மற்றும் கிசான் சேமிப்புக் கணக்குகளில் ரூ. 5,000 மினிமம் பேலன்ஸ் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது., இதனை போலவே ICICI வங்கியானது தனது குறைந்தபட்ச மாதாந்திர சராசரி இருப்பு (MAB), பண பரிவர்த்தனை கட்டணங்கள், ஏடிஎம் பரிமாற்றக் கட்டணம் போன்ற பல வங்கிச் சேவை கட்டங்களில் மாற்றங்களை செய்துள்ளதாக கூறியுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!