ஜனவரி 31 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

0
ஜனவரி 31 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு - மாநில அரசு அறிவிப்பு!!
ஜனவரி 31 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு - மாநில அரசு அறிவிப்பு!!
ஜனவரி 31 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் மத்திய உள்துறை அமைச்சகத்தால் ஜனவரி 31 வரை ஏற்கனவே நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநில அரசு ஜனவரி 31ம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுத்துவதாக அறிவித்து உள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு:

இது தொடர்பாக மகாராஷ்டிரா மாநில அரசு வெளியிட்டு உள்ள அறிக்கையில், “கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, வைரஸ் பரவுவதைத் தடுக்க மற்றும் கட்டுப்படுத்த சில அவசர நடவடிக்கைகளை எடுக்க, மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் ஜனவரி 31 நள்ளிரவு 12 மணிவரை அமலில் இருக்கும்.

மத்திய அரசின் புதிய முதலீட்டு அனுமதி அமைப்பு – ஏப்ரல் மாதம் அறிமுகம்!!

ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட மற்றும் ஊரடங்கு உத்தரவின் மத்தியில் அவ்வப்போது அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடரப்படும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் பொருளாதார நடவடிக்கைகளை அனுமதிக்கும் முயற்சியில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களால் பல ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.

கடந்த நவம்பர் மாதத்தில், வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறக்க மாநில அரசாங்கம் அனுமதித்திருந்தது. கூடுதலாக, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிகளும் மாநிலத்தின் சில பகுதிகளில் மீண்டும் திறக்கப்பட்டன.

மாநில காவல் துறையில் 5.31 லட்சம் காலிப்பணியிடங்கள் – மத்திய அமைச்சகம் தகவல்!!

மகாராஷ்டிராவில் இதுவரை 19,25,066 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3,018 பேருக்கு புதிதாக பாதிப்பு உறுதியாகி உள்ள நிலையில், 69 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மாநிலத்தில் மொத்த பலி எண்ணிக்கை 49,373 ஐ எட்டியுள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள 54,537 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!