தமிழகத்தில் டிச.26 உள்ளூர் விடுமுறை – வெளியான சூப்பர் அறிவிப்பு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு அன்றைய தினம் மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.
உள்ளூர் விடுமுறை:
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுசீந்திரம் தனமாயாலன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது இந்த ஆலயத்தில் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் ஒரு சேர காட்சியளிக்கின்றனர். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் 10 நாட்கள் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இதில் ஒன்பதாம் நாள் தேர் திருவிழா அன்று 4 வீதிகளிலும் சுவாமி ஊர்வலம் நடைபெறும்.
இதனை காண வெளி மாவட்டங்களிலும் பல்வேறு மக்கள் வருகை புரிவர். நடப்பு ஆண்டு திருவிழா துவங்கவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்கும் வகையில் டிசம்பர் 26 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். இந்த விடுமுறை ஈடு செய்யும் இடம் 2024 ஜனவரி 20ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.