வட்டி இல்லாமல் EPFO வீட்டுக்கடன் பெறுதல் – எளிய வழிமுறை!!

0
வட்டி இல்லாமல் EPFO வீட்டுக்கடன் பெறுதல் - எளிய வழிமுறை!!
வட்டி இல்லாமல் EPFO வீட்டுக்கடன் பெறுதல் - எளிய வழிமுறை!!
வட்டி இல்லாமல் EPFO வீட்டுக்கடன் பெறுதல் – எளிய வழிமுறை!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் கீழ் ஒருவர் வீட்டுக்கடன் அல்லது பர்சனல் லோனை பெறலாம். இந்த கடன்களை பெற்று கொள்வதற்கு எளிய வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டுக்கடன்

வருங்கால வைப்பு நிதியின் கீழ் ஒருவர் வீடு அல்லது வீட்டு மனை வாங்குவதற்கும், வீட்டு கடனை திரும்ப செலுத்துவதற்கும் கடன் தொகையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் திருமணம், கல்வி மற்றும் மருத்துவ செலவுக்காகவும், இயற்கை பேரிடர்களுக்காகவும் கடன் தொகை பெற்றுக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில் வீடு அல்லது வீட்டுமனை வாங்குவதற்கு, கடன் பெற்றுக் கொள்ள விரும்புபவர் அல்லது அவரது மனைவி பெயரில் சம்மந்தப்பட்ட வீடு அல்லது மனை இருக்க வேண்டும். அதே சமயம் வீட்டுமனை வாங்குவதற்கு 24 மடங்கு வரை கடன் தொகைகளை பெற்று கொள்ளலாம். வீட்டுக்கடனை பெறவேண்டும் என்றால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீங்கள் பணியில் இருக்க வேண்டியது கட்டாயமாகும்.

6 வங்கிகளின் IFSC கோர்டுகள் மாற்றம் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!!

கடன் பெற்றுக்கொள்ள வழிமுறைகள்;

  • கடன் பெற வேண்டும் என்றால் முதலில் உங்களிடம் UAN எண் இருக்க வேண்டும்.
  • UAN எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண், ஆதார் எண், வங்கி கணக்கு, பான் கார்டு போன்றவை அவசியம்.
  • இதற்கு பிறகு Member e-SEWA தளத்துக்கு சென்று உங்கள் UAN எண் மற்றும் பாஸ்வேர்டை பதிவு செய்து லாகின் செய்து கொள்ளவும்.
  • பிறகு MANAGE என்ற பதிவை கிளிக் செய்ய வேண்டும்.
  • அங்கு உங்கள் தொலைபேசி எண், ஆதார் எண், வங்கி கணக்கு, பான் கார்டு போன்றவற்றை சரி பார்த்துக் கொள்ளவும்.
  • பிறகு ஆன்லைன் services பகுதிக்கு செல்லவும்.
  • அதில் CLAIM (Form-31,19 and C) ஐ செலக்ட் செய்யவும்.
  • பின்பாக உங்கள் வங்கி கணக்கின் கடைசி நான்கு இலக்க எண்ணை பதிவு செய்யவும்.
  • பிறகு verify ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • பிறகு yes என்ற ஆப்ஷனை அழுத்தவும்.
  • பின்பாக Proceed for Online Claim என்பதை தேர்வு செய்யவும். பிறகு I want to apply for என்பதை தெரிவு செய்யவும்.
  • அதில் கேட்கப்பட்டுள்ள கடன் பெறுவதற்கான காரணம், கடன் தொகை, முகவரி என அனைத்து விவரங்களையும் பதிவு செய்யவும்.

இதன் பின்பாக உங்கள் நிறுவனத்தின் ஒப்புதலோடு, கடன் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 15 முதல் 20 நாட்களுக்குள்ளாக உங்கள் வங்கி கணக்கில் கடன் தொகை வரவு செலுத்தப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!