
Government Jobs:10ம் வகுப்பு முடித்தவரா நீங்கள்…உங்களுக்காக கொட்டிக்கிடக்கும் தேர்வில்லாத அரசு வேலைகள்..!! அள்ள தயாராக இருங்கள்..முழு விவரம் உள்ளே”..!!
TNPSC குரூப் 4 தேர்வை 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் எழுதலாம். இத்தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், உதவி தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் ஆயிரக்கணக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதில் தேர்ச்சி பெற்று பணியில் அமர்பவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.15,900 தொடங்கி ரூ.75,900 வரை வழங்கப்படுகிறது. மேலும், ரேஷன் கடை வேலை, இந்து அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்படும் கோவில் சம்பந்தப்பட்ட வேலை, மாவட்ட சுகாதார சங்கம் வேலை, தமிழ்நாடு செய்தியாளர் மற்றும் காகிதங்கள் லிமிடெட் வேலை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அறக்கட்டளை வேலை, சிறார் நீதி வாரியம் வேலை மற்றும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் என 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு இடங்களில் அரசு வேலைகள் கொட்டிக்கிடக்கின்றன. அதே, மத்திய அரசு வேலைகள் என்று எடுத்துக்கொண்டால், இராணுவம், ரயில்வே போன்ற துறைகளில் ஒரு சில பதவிகளுக்கு 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன . மேலும், மத்திய மற்றும் மாநில அரசு பணியாளர் தேர்வு ஆணையம், இதற்கான தேர்வுகள் நடைபெறும் தேதியை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. இதை நீங்கள் தவறவிடாமல் பயன்படுத்துமாறு அறிவுறுத்துகிறோம்.


























10th pass 431 mark me write exam
No comments
Government jobs 10mark