List of Education Minister of India from 1947 to 2025 Tamil – Free PDF Download
What is Education?
கல்வி என்பது ஒருவரின் அறிவு, திறன், மற்றும் புரிதலை வளர்க்கும் ஒரு செயல்முறை ஆகும். இது பெரும்பாலும் பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களில் கற்பித்தல் மற்றும் கற்றல் மூலம் சாதிக்கப்படுகிறது. மேலும், கல்வியாளர்களின் கூற்றுபடி, இளைய தலைமுறையை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் சிறப்பான பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது.
Education in India
இந்தியா முழுவதும் தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதற்காக கல்வி அமைச்சகம் ஆனது செப்டம்பர் 26, 1985 அன்று மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. ராஜீவ் காந்தி தலைமையிலான அரசு இந்த கல்வி அமைச்சகத்தை, மனிதவள மேம்பாட்டு அமைச்சகமாக (MHRD) மாற்றியமைத்தது. பின்னர், 2020 ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட “தேசிய கல்விக் கொள்கை” இன் படி நரேந்திர மோடி அரசாங்கம் மீண்டும் இதை கல்வி அமைச்சகம் என மறுபெயரிட்டது. இந்த அமைப்பை கல்வி அமைச்சர் நிர்வகிப்பார். தற்போது, இது இரண்டு துறைகளை உள்ளடக்கியுள்ளது. அவை,
- பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை – இந்தியாவில் தொடக்க, இடைநிலை, உயர்நிலைக் கல்வி மற்றும் எழுத்தறிவை கையாள்கிறது.
- உயர் கல்வித் துறை – இடைநிலை, உயர்நிலை மற்றும் பல்கலைக்கழக அளவிலான கல்வி, தொழில்நுட்பக் கல்வி, உதவித்தொகைகள் போன்றவற்றை கையாள்கிறது. மேலும், கல்வி நிறுவனங்களுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்தை வழங்க இந்தத் துறைக்கு அதிகாரம் உண்டு.
Role of Education Minister in India
இந்தியாவின் கல்வி முறையை வடிவமைப்பதில் கல்வி அமைச்சர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். மேலும், சுதந்திரத்தின் போது 12% எழுத்தறிவு விகிதத்திலிருந்து தற்போது 75% எழுத்தறிவு விகிதமாக மாறியதில் இந்தியாவின் கல்வி அமைச்சர்களுக்கு மகத்தான பங்கு உண்டு. மேலும், கல்விக் கொள்கைகளை உருவாக்குதல், கல்விக்கான நிதி வழங்குதல், கல்வி நிறுவனங்களின் செயல்திறனை மேற்பார்வை செய்தல், கல்வியில் சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவித்தல், மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் பிற நிதி உதவிகளை வழங்குதல், கல்வியில் ஆராய்ச்சி நடத்துதல் போன்ற பல்வேறு பொறுப்புகளை கல்வி அமைச்சர் நிர்வகிக்கிறார். இதுவரை 30 க்கும் மேற்பட்ட கல்வி அமைச்சர்கள் இந்தியாவில் பதவி வகித்துள்ளனர்.
இந்நிலையில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் ஆர்வலர்களின் புரிதலுக்காக, இந்தியாவில் பதவி வகித்து கல்வி அமைச்சர்களின் பட்டியல் பற்றி கீழே உள்ள பதிவில் விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்.
List of Education Ministers of India from 1947 to 2025
|
இந்திய கல்வி அமைச்சர்கள் |
பதவியேற்ற நாள் |
பதவி நிறைவு பெற்ற நாள் |
| மௌலானா அபுல் கலாம் ஆசாத் | 15 ஆகஸ்ட் 1947 | 22 ஜனவரி 1958 |
| டாக்டர் கே.எல். ஸ்ரீமாலி | 22 ஜனவரி 1958 | 31 ஆகஸ்ட் 1963 |
| ஸ்ரீ ஹுமாயூன் கபீர் | 1 செப்டம்பர் 1963 | 21 நவம்பர் 1963 |
| ஸ்ரீ எம்.சி. சாக்லா | 21 நவம்பர் 1963 | 13 நவம்பர் 1966 |
| ஸ்ரீ ஃபக்ருதீன் அலி அகமது | 14 நவம்பர் 1966 | 13 மார்ச் 1967 |
| டாக்டர் திரிகுணா சென் | 16 மார்ச் 1967 | 14 பிப்ரவரி 1969 |
| டாக்டர் வி.கே.ஆர்.வி. ராவ் | 14 பிப்ரவரி 1969 | 18 மார்ச் 1971 |
| ஸ்ரீ சித்தார்த்த சங்கர் ரே | 18 மார்ச் 1971 | 20 மார்ச் 1972 |
| பேராசிரியர் எஸ். நூருல் ஹசன் | 24 மார்ச் 1972 | 24 மார்ச் 1977 |
| பேராசிரியர் பிரதாப் சந்திர சுட்னர் | 26 மார்ச் 1977 | 28 ஜூலை 1979 |
| டாக்டர் கரண் சிங் | 30 ஜூலை 1979 | 14 ஜனவரி 1980 |
| ஸ்ரீ பி. சங்கராநந்த் | 14 ஜனவரி 1980 | 17 அக்டோபர் 1980 |
| ஸ்ரீ எஸ்.பி. சவான் | 17 அக்டோபர் 1980 | 08 ஆகஸ்ட் 1981 |
| திருமதி ஷீலா கவுல் | 10 ஆகஸ்ட் 1981 | 31 டிசம்பர் 1984 |
| ஸ்ரீ கே.சி. பந்த் | 31 டிசம்பர் 1984 | 25 செப்டம்பர் 1985 |
| ஸ்ரீ பி.வி. நரசிம்ம ராவ் | 25 செப்டம்பர் 1985 | 25 ஜூன் 1988 |
| 25 டிசம்பர் 1994 | 09 பிப்ரவரி 1995 | |
| 17 ஜனவரி 1996 | 16 மே 1996 | |
| ஸ்ரீ பி. சிவசங்கர் | 25 ஜூன் 1988 | 02 டிசம்பர் 1989 |
| ஸ்ரீ வி.பி. சிங் | 2 டிசம்பர் 1989 | 10 நவம்பர் 1990 |
| ஸ்ரீ ராஜ்மங்கல் பாண்டே | 21 நவம்பர் 1990 | 21 ஜூன் 1991 |
| ஸ்ரீ அர்ஜுன் சிங் | 23 ஜூன் 1991 | 24 டிசம்பர் 1994 |
| ஸ்ரீ மாதவ்ராவ் சிந்தியா | 10 பிப்ரவரி 1995 | 17 ஜனவரி 1996 |
| ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் | 16 மே 1996 | 01 ஜூன் 1996 |
| ஸ்ரீ எஸ்.ஆர். பொம்மை | 05 ஜூன் 1996 | 19 மார்ச் 1998 |
| டாக்டர் முரளி மனோகர் ஜோஷி | 19 மார்ச் 1998 | 21 மே 2004 |
| ஸ்ரீ அர்ஜுன் சிங் | 22 மே 2004 | 22 மே 2009 |
| ஸ்ரீ கபில் சிபல் | 22 மே 2009 | 28 அக்டோபர் 2012 |
| ஸ்ரீ எம்.எம். பல்லம் ராஜு | 29 அக்டோபர் 2012 | 25 மே 2014 |
| ஸ்ரீமதி. ஸ்மிருதி இரானி | 26 மே 2014 | 05 ஜூலை 2016 |
| ஸ்ரீ பிரகாஷ் ஜவடேகர் | 05 ஜூலை 2016 | 31 மே 2019 |
| ரமேஷ் பொக்ரியால் | 31 மே 2019 | 21 ஜூன் 2021 |
| தர்மேந்திர பிரதான் | 21 ஜூன் 2021 | – |


























