
மூத்த குடிமக்களுக்காக LIC அறிமுகப்படுத்தியுள்ள சிறப்பு பென்ஷன் ப்ளான்.. உடனே இந்த திட்டத்தில் முதலீடு செய்யுங்க..
அதாவது, “LIC யின் ஸ்மார்ட் பென்ஷன் திட்டம் என்பது மூத்த குடிமக்கள் தங்களது ஓய்வு காலத்தின் போது நிலையான வருமானம் மற்றும் பொருளாதார பாதுகாப்பு பெற வடிவமைக்கப்பட்ட திட்டமாகும்”. இத்திட்டத்தில் சேர “குறைந்தபட்ச தொகையாக மாதம் ரூ.1000 முதல் உச்ச வரம்பாக எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளலாம்”. மேலும், நிபந்தனை மற்றும் விதிமுறைகளின் அடிப்படையில் முதலீட்டாளர்கள் தங்களது பணத்தை முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ எடுத்துக் கொள்ளக்கூடிய வசதியும் இந்த திட்டம் வழங்குகிறது. இதை தொடர்ந்து, “18 வயது நிறைவு பெற்ற யார் வேண்டுமானாலும் இந்த ஓய்வூதிய திட்டத்தில் தனி நபராகவோ அல்லது கூட்டு நபராகவோ சேர்ந்து கொள்ளலாம். மேலும், ஒரு முறை இந்த முதலீட்டு தொகையை தேர்வு செய்து விட்டால் பின்னர் மாற்ற முடியாது” என்பதை கருத்தில் கொண்டு பாலிசிதாரர்கள் கவனமாக தேர்வு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
























