ஆயுட்காலம் வரை ரூ. 1 லட்சம் ஓய்வூதியம்…|| அசத்தலான இந்த புதிய திட்டம்”..!!!
மக்கள் மத்தியில் mutual fund முதலீடு திட்டமானது அதிக வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், அவர்கள் எதிர்கால செலவுகளை கருத்தில் கொண்டு, தங்களின் ஊதியத்தின் ஒரு பகுதியை இத்திட்டத்தில் முதலீடு செய்து சேமித்து வருகிறார்கள். அந்த வகையில், ஒரு முறை மட்டுமே முதலீடு செய்வதன் மூலம், ஆயுள் முழுவதும் நமக்கு ஓய்வூதியம் கிடைக்கும் ” LIC புதிய ஜீவன் சாந்தி” என்ற உத்திரவாத ஓய்வூதிய திட்டத்தை LIC நிறுவனமானது செயல்படுத்தி வருகிறது.
LIC புதிய ஜீவன் சாந்தி திட்டத்தில் எந்த வயதினரும் இணையலாம். இதில் குறைந்தபட்ச முதலீடு ரூ.1.5 லட்சம் ஆகும். மேலும், இதில் 30 ஆண்டுகள் முதல் 79 ஆண்டுகள் வரை கால வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், நீங்கள் பாலிசி எடுத்த உடனே கால வரம்பை நிர்ணயித்துக் கொள்ளலாம். உதாரணமாக, இப்போது நீங்கள் மொத்த தொகையாக ரூ.11 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்றால், உங்களுக்கு 60 வயது ஆனதும், ஆண்டு ஓய்வூதியமாக ரூ.1,02,850 கிடைக்கும். அப்படி இல்லையென்றால், 6 மாதம் ஒருமுறை ரூ.50,365 அல்லது மாதந்தோறும் ரூ.8217 நாம் பெற்றுக் கொள்ளலாம். ஒருவேளை, கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால், அவரின் நாமினிக்கு மொத்த தொகையாக 12,10,000 ரூபாய் வழங்கப்படும். மேலும், இந்த திட்டமானது எந்த நேரத்திலும் நிறுத்தப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


























