புவியின் வளிமண்டல அடுக்குகள்

1

புவியின் வளிமண்டல அடுக்குகள்

TNPSC, UPSC பாடக்குறிப்புகள்- கிளிக் செய்யவும்

புவியியல் பாடக்குறிப்புகள் –கிளிக் செய்யவும்

புவியின் வளிமண்டலம் என்பது பூமியின் ஈர்ப்புச் சக்தியினால் அதனைச் சூழ்ந்து இருக்கும்படி அமைந்துள்ள பல்வேறு வாயுக்களின் படலமாகும்.

இது ஐந்தில் நான்கு பங்கு நைட்ரஜனையும், ஐந்தில் ஒரு பங்கு ஆக்ஸிஜனையும் மிகக் குறைந்த அளவில் கரியமில வாயு உட்பட்ட மேலும் பல வாயுக்களையும் கொண்டுள்ளது.

சூரியக் கதிர்வீச்சிலிருக்கும் புறஊதாக் கதிர்களை உறிஞ்சிக் கொள்வதன் மூலமும், பகல், இரவு நேரங்களுக்கு இடையேயான வெப்பநிலை வேறுபாடுகளைக் குறைப்பதன் மூலமும் வளிமண்டலம் பூமியில் உயிர் வாழ்வைக் காத்து வருகிறது.

வளிமண்டலத்தின் அடர்த்தி படிப்படியாகக் குறைந்து வந்து இல்லாமல் போய் விடுகிறது. வளிமண்டலத்துக்கும், ஆகாய வெளிக்கும் இடையே வரையறுக்கப்பட்ட எல்லை எதுவும் இல்லை.

வளிமண்டலத்தின் முக்கால் பகுதித் திணிவு புவியின் மேற்பரப்பிலிருந்து 11 கிலோமீட்டர் தூரத்துக்குள் அடங்கியுள்ளது.

ஐக்கிய அமெரிக்காவில் 80.5 கி.மீட்டர்களுக்கு மேல் செல்லும் எவரும் விண்வெளிவீரர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

விண்வெளியிலிருந்து திரும்பும் போது வளிமண்டலத்தின் பாதிப்புப் புலப்படத் தொடங்குமிடம் 120 கிமீ உயரத்தில் உள்ளதாகவும் கருதப்படுகிறது. 100 கிமீ உயரத்திலுள்ள கர்மான் கோடு எனப்படும் கோடும் வளிமண்டலத்துக்கும் விண்வெளிக்கும் இடையிலான எல்லையாகக் கருதப்படுவதுண்டு.

பூமியின் வளிமண்டல கூறுகள் பின்வருமாறு:

  • புவியின் வளிமண்டலம் நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றையே கூடுதலாகக் கொண்டுள்ளது. இதனைத் தவிர ஆர்கன், நீராவி மற்றும் பல வாயுக்கள் புவியின் வளிமண்டலத்தில் குறைந்த அளவில் காணப்படுகின்றன.பூமியின் வளிமண்டல கூறுகள் பின்வருமாறு:
வாயு கனளவு
நைட்ரஜன் (N2) 780,840 ppmv (78.084%)
ஆக்சிஜன் (O2) 209,460 ppmv (20.946%)
ஆர்கன் (Ar) 9,340 ppmv (0.9340%)

 

வளிமண்டல அடுக்குகள்:

வளிமண்டலம் தனித்த அடுக்குகளை உருவாக்குகிறது. அணுக்கள் மற்றும் மூலக்கூறுகள் அடுக்குக்குள் விரைவாக செல்கின்றன, ஆனால் மிக மெதுவாக அடுக்குகளுக்கு இடையில் மட்டுமே செல்கின்றன. வாயு மூலக்கூறுகளின் வெப்பநிலை ஒவ்வொரு அடுக்குகளிலும் மாறுபடுகிறது

  1. அடிவளிமண்டலம் (Troposphere)
  2. படைமண்டலம் (Stratosphere)
  3. இடை மண்டலம் (mesosphere)
  4. வெப்ப வளிமண்டலம் (thermosphere)
  5. புறவளி மண்டலம் (exosphere)

1. அடிவளிமண்டலம் (Troposphere)

  • அடிவளிமண்டலம் (Troposphere) என்பது புவியின் வளிமண்டலத்தின் மிகவும் கீழேயுள்ள அடுக்கு ஆகும்.
  • வளிமண்டலத்தின் மொத்தத் திணிவின் 75 வீதமும்; நீராவி, தொங்கல் நிலையில் உள்ள தூசித் துணிக்கைகள் ஆகியவற்றின் 99 வீதமும் அடிவளிமண்டலத்திலேயே உள்ளன.
  • இந்த அடுக்கில் வெப்பச்சுற்றுத் தொடர்ந்து நிகழ்ந்தவண்ணம் உள்ளது. நிலநடுக்கோட்டுப் பகுதியில் அடிவளிமண்டலத்தின் சராசரித் தடிப்பு சுமார் 17 கிலோமீட்டர் (10 மைல்கள்) ஆகும்.
  • வெப்பவலயப் பகுதிகளில் இதன் தடிப்பு 20 கிலோமீட்டர் (12 மைல்கள்) அளவுக்குப் பரந்துள்ளது. துருவப் பகுதிகளில் கோடையில் 7 கிலோமீட்டர் (4 மைல்கள்) அளவாகக் காணப்படும் இதன் தடிப்பு மாரி காலங்களில் தெளிவற்றதாக உள்ளது.
  • மேற்பரப்பிலிருந்து 7 கிமீ தொடக்கம் 17 கிமீ வரை, அகலாங்குகள் மற்றும் காலநிலை சார்ந்த காரணிகளைப் பொறுத்து உயரத்துடன் வெப்பநிலை குறைவடைகின்றது. வளியிலுள்ள வாயுக்களில் 90% காணப்படும்
  • லேப்ஸ் விகிதம் – ஒரு கிலோமீட்டர் (கிமீ) க்கு 6.5 டிகிரி செல்சியஸ்  
  1. படைமண்டலம்
  • படைமண்டலம் (Stratosphere) என்பது புவியின் வளிமண்டலத்தில் இரண்டாவதாக உள்ள அடுக்கு ஆகும்.
  • இது அடிவளிமண்டலத்திற்கும் இடை மண்டலத்திற்கும் நடுவே காணப்படுகின்றது.
  • அடிவளிமண்டலத்துக்கு மேல் 50 கி.மீ வரை உயரம் அதிகரிக்க வெப்பநிலை கூடுகின்றது.
  • இதிலேயே ஓசோன் படையும் காணப்படுகின்றது.
  1. இடை மண்டலம்
  • இடை மண்டலம் (mesosphere) என்பது புவியின் வளிமண்டலத்தில் மூன்றாவதாக உள்ள அடுக்கு ஆகும்.
  • 50 கி.மீட்டரிலிருந்து 80 – 85 கிமீ வரையான பகுதிக்குள் உயரம் அதிகரிக்க வெப்பநிலை குறைகின்றது.
  • இது படை மண்டலத்திற்கும்  வெப்ப மண்டலத்திற்கும் நடுவே காணப்படுகின்றது.
  1. வெப்ப வளிமண்டலம்
  • வெப்ப வளிமண்டலம் (thermosphere) என்பது புவியின் வளிமண்டலத்தில் நான்காவதாக உள்ள அடுக்கு ஆகும்.
  • 80 – 85 கிமீ முதல் 640+ கிமீ வரை வெப்பநிலை உயரத்துடன் அதிகரிக்கின்றது. வானொலி அலைகள் இம்மண்டலத்தில் தெறிப்படைந்து பூமியை அடையும்
  • இது இடை மண்டலத்திற்கும் புறவளி மண்டலத்திற்கும் நடுவே காணப்படுகின்றது.
  1. புறவளி மண்டலம்
  • புறவளி மண்டலம்(exosphere) என்பது புவியின் வளிமண்டலத்தில் ஐந்தாவதாக உள்ள அடுக்கு ஆகும்.
  • மேற்படி பகுதிகளுக்கிடையான எல்லைகள் அடிவளி எல்லை (tropopause), அடுக்கெல்லை (stratopause), இடையெல்லை (mesopause) எனப்படுகின்றன.
  • பூமியின் மேற்பரப்பில் வளிமண்டலத்தின் சராசரி வெப்பநிலை 14°C ஆகும்.

PDF Download

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!