அரசு இலவச பேருந்து மூலம் குஷியான பெண்கள் – வெளியான ஆய்வறிக்கை!
தமிழகத்தில் தற்போது செயல்பாட்டில் இருந்து வரும் பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம் குறித்து ஆய்வு அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இலவச பேருந்து:
தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் முதல்வர் தனது வாக்குறுதிகளில் ஐந்து முக்கிய திட்டங்களுக்கு முதல் கையெழுத்தை போட்டு திட்டங்களை செயல்படுத்தி வைத்தார். அதன்படி தமிழகம் முழுவதும் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இத்திட்டம் மேலும் மேம்படுத்தப்பட்டு இலவச பேருந்துகள் பிங்க் நிறங்களில் வண்ணம் தீட்டப்பட்டு வேறுபடுத்தி காட்டப்பட்டது. இந்நிலையில் திட்டம் குறித்து சென்னையில் 3000 பொதுமக்களிடம் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டு, இதன் அறிக்கையை சென்னை மேயர் வெளியிட்டுள்ளார்.
UCIL 243 Apprentice பதவிக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு…Dont Miss it!
ஆய்வில் 2432 பெண்கள், 568 ஆண்கள், 100 திருநங்கைகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இவற்றில் 89% பெண்கள் அரசு இலவச பேருந்துகளை மட்டுமே நம்பி இருப்பதாகவும், அதில் 82% பேர் இதன் மூலமாக தங்களுக்கு பெரும் அளவு பணம் மிச்சப்படுத்தப்படுவதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதன் பின்னர் மாநகரப் போக்குவரத்து கழகத்திற்கு பேருந்து பயணங்களின் போது பெண்களுக்கு ஏற்படும் இடைஞ்சல்களை சமாளிக்கும் வகையில் அவசரகால பொத்தான்கள் பற்றிய விழிப்புணர்வை பெண் பயணிகளுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.