12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு கரூர் KVK நிறுவனத்தில் வேலை 2021 !
இந்திய வேளாண் ஆராச்சி கழகத்தின் கீழ் செயல்படும் கிருஷி விஜியன் கேந்திரா எனப்படும் மத்திய அரசு நிறுவனத்தில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Subject Matter Specialist & Agromet Observer பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே திறமை வாய்ந்தவர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | KVK Karur |
பணியின் பெயர் | Subject Matter Specialist & Agromet Observer |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 15.02.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
கரூர் KVK வேலைவாய்ப்பு :
Subject Matter Specialist & Agromet Observer பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்கலாம்.
கல்வித்தகுதி :
- Subject Matter Specialist – Animal Science மற்றும் Agrometeorology ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.
- Agromet Observer – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,600/- முதல் அதிகபட்சம் ரூ.39,100/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
திறமையானவர்கள் 15.02.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
KVK Karur Notification PDF 2021
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |