ரயில் டிக்கெட் கேன்சல் செய்ய போறீங்களா?..  அப்போ இத தெரிஞ்சுட்டு போங்க… இல்லைனா உங்களுக்குத்தான் லாஸ்…

0
????? ???????? ??????? ????? ??????????..  ????? ?? ???????????? ?????... ??????? ???????????????? ????...
ரயில் டிக்கெட் கேன்சல் செய்ய போறீங்களா?..  அப்போ இத தெரிஞ்சுட்டு போங்க... இல்லைனா உங்களுக்குத்தான் லாஸ்...

ரயில் டிக்கெட் கேன்சல் செய்ய போறீங்களா?..  அப்போ இத தெரிஞ்சுட்டு போங்க… இல்லைனா உங்களுக்குத்தான் லாஸ்…

சாலைப் போக்குவரத்திற்கு அடுத்தபடியாக ரயில் போக்குவரத்து மிகவும் எளிதான மற்றும் ஆற்றலுடைய ஒன்றாக மக்களிடையே கருதப்படுகிறது. மேலும், உலகளவில் சுமார் 8% பயணிகள் ரயில் போக்குவரத்தையே  சார்ந்துள்ளனர். இந்நிலையில் இடையூரின்றி நீண்ட நேர பயணிக்க,   பலர் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்து பயணத்தை மேற்கொள்வார்கள், ஆனால் கடைசி நேரத்தில் டிக்கெட் உறுதி செய்யப்படாத காரணத்தால் அதை பலரும் ரத்து செய்து வருகிறார்கள். அவ்வாறு ரத்து செய்தால் ரயில்வே வாரியம் எவ்வளவு பணம் பிடித்தம் செய்யும் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

 

இங்கு ஜனவரி முதல் சுங்கக் கட்டணம் வசூல்…!! ” அதிர்ச்சியில் மக்கள்”…முழு தகவலுடன் உள்ளே”..!

அதாவது இந்திய ரயில்வேயின் விதிகளின்படி, உறுதி செய்யப்பட்ட டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் செலுத்திய முழு பணத்தையும் திரும்பப் பெற ரயில் புறப்படுவதற்கு குறைந்தபட்சம் 4 மணி நேரத்திற்கு முன்பே தங்கள் டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டும். அவ்வாறு ரத்து செய்யாவிட்டால், பணம் திரும்ப வழங்கப்படாது என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட செகண்ட் கிளாஸ் இருக்கை வசதி கொண்ட டிக்கெட்டை ரத்து செய்தால் அவர்களுக்கு ரூ.60 பிடித்தமும், படுக்கை வசதி கொண்ட டிக்கெட்டை ரத்து செய்தால் அவர்களுக்கு ரூ.120 பிடித்தமும், குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளின் டிக்கெட்டை ரத்து செய்தால் ரூ.200 பிடித்தம் மற்றும் பர்ஸ்ட் கிளாஸ் குளிர்சாதன பெட்டி மற்றும் எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் பயணம் செய்யும் பயணிகள் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டை ரத்து செய்தால் ரூ.240 பிடித்தம் செய்யப்படும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!