வெண்ணிலாவிற்கு தெரியாமல் தாலி கட்டும் சூர்யா – காற்றுக்கென்ன வேலி சீரியல் ஷாக் ட்விஸ்ட்!
காற்றுக்கென்ன வேலி சீரியலில் சூர்யா மற்றும் வெண்ணிலா திருமணம் எப்போது நடக்கும் என்று ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து உள்ள நிலையில், அந்த தருணம் வந்து விட்டது.
காற்றுக்கென்ன வேலி:
காற்றுக்கென்ன வேலி சீரியலில் வெண்ணிலா படிப்பின் மீது ஆர்வம் கொண்ட பெண்ணாக உள்ளார். கிராமத்தில் இருந்து வரும் அவரை கல்லூரியில் சேர்த்து படிக்க கல்லூரி நிர்வாகத்தினர் உதவி செய்கின்றனர். நிர்வாகத்தினரின் குடும்பத்தில் இருக்கும் சூர்யா அந்த கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார். ஆரம்பத்தில் மோதலாக சென்ற வெண்ணிலா மற்றும் சூர்யா தொடர்பான காட்சிகள் பின்னர் காதலாக மலர்ந்தது.
தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை – வானிலை எச்சரிக்கை!
பல பிரச்சனைகளையும் தாண்டி திருமணம் வரை சென்று, குடும்பத்தினரின் சதியால் திருமணம் நின்று விடுகிறது. இந்நிலையில், சூர்யா வழியில் பார்த்த சாமியார் ஒருவர் கையில் தாலி கயிறை கொடுத்து 10 நாளில் உனக்கு திருமணம் முடிந்து விடும் என்று சொல்லுகிறார். வீட்டிற்கு வந்தால் சூர்யாவின் பெரியம்மா 10 நாளில் சூர்யாவுக்கும், ஷிவானிக்கும் திருமணம் என்று சொல்லுகிறார். இதனால், பயந்து போன சூர்யா, வெண்ணிலாவை கோயிலுக்கு பேச வேண்டும் எண்று வர வைக்கிறார். அங்கு வெண்ணிலா கண்ணை மூடி சாமி கும்பிடும் போது சூர்யா வெண்ணிலா கழுத்தில் தாலி கட்டி விடுகிறார்.
Join Our WhatsApp
Group” for Latest Updates
Follow our Instagram for more Latest Updates