கரூர் RDM ஆட்சேர்ப்பு 2025 – 13 கிராம உதவியாளர் பணியிடங்கள் | 10ஆம் வகுப்பு தகுதி| மாதம் ₹35,100 வரை சம்பளம்

0
கரூர் RDM ஆட்சேர்ப்பு 2025 – 13 கிராம உதவியாளர் பணியிடங்கள் | 10ஆம் வகுப்பு தகுதி| மாதம் ₹35,100 வரை சம்பளம்
கரூர் RDM ஆட்சேர்ப்பு 2025 – 13 கிராம உதவியாளர் பணியிடங்கள் | 10ஆம் வகுப்பு தகுதி| மாதம் ₹35,100 வரை சம்பளம்

கரூர் RDM ஆட்சேர்ப்பு 2025 – 13 கிராம உதவியாளர் பணியிடங்கள் | 10ஆம் வகுப்பு தகுதி| மாதம் ₹35,100 வரை சம்பளம்

கரூர் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை (Karur Revenue and Disaster Management Department) சார்பில் கிராம உதவியாளர் (Village Assistant) பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பில் மொத்தம் 13 காலியிடங்கள் உள்ளன. தமிழ்நாடு அரசு பணிகளில் ஆர்வமுள்ளவர்கள், குறிப்பாக 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம். விண்ணப்பங்கள் ஆஃப்லைன் முறையில் மட்டும் ஏற்கப்படும். தகுதியானவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் 2025 அக்டோபர் 27ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். தேர்வு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக நடைபெறும். தேர்வு செய்யப்பட்டவர்கள் மாதம் ₹11,100 முதல் ₹35,100 வரை சம்பளத்துடன் பணியமர்த்தப்படுவர்.

காலியிட விவரம் 

தாலுகா பெயர் காலியிடங்கள்
புகலூர் 1
மன்மங்கலம் 5
அரவக்குறிச்சி 3
கரூர் 4
மொத்தம் 13

கல்வித் தகுதி

  • விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

  • அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு 

  • குறைந்தபட்ச வயது: 21 வயது

  • அதிகபட்ச வயது: 32 வயது

வயது தளர்வு (Age Relaxation):

  • OBC / MBC: 7 ஆண்டுகள்

  • SC / SC(A) / ST / Widow: 10 ஆண்டுகள்

SAIL ஆட்சேர்ப்பு 2025 – GDMO பதவிக்கான வேலைவாய்ப்பு | மாதம் ₹90,000 சம்பளம் | நேர்காணல் தேதி: 27.10.2025

சம்பள விவரம் 

  • ₹11,100 – ₹35,100/- மாத சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்

  • எந்தவித கட்டணமும் இல்லை.

தேர்வு செயல்முறை

  1. எழுத்துத் தேர்வு (Written Test)

  2. நேர்காணல் (Interview)

விண்ணப்பிக்கும் முறை 

  1. அதிகாரப்பூர்வ இணையதளம் karur.nic.in சென்று அறிவிப்பைப் பதிவிறக்கம் செய்யவும்.

  2. விண்ணப்பப் படிவத்தை அச்சிட்டு (Print) எடுத்து, தேவையான விவரங்களை துல்லியமாக நிரப்பவும்.

  3. தேவையான ஆவணங்களுடன் (சுய சான்றளிப்பு நகல்கள் உடன்) கீழ்கண்ட முகவரிக்கு 27-10-2025க்குள் அனுப்பவும்.

முகவரி:
தொடர்புடைய தாலுகா அலுவலகம்,
கரூர் மாவட்டம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!