இணையதளத்தில் ஒரே நாளில் விற்று தீர்ந்த கருணாநிதி நாணயங்கள்.. வெளியான முக்கிய தகவல்!!
கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, அவரது உருவம் பொறிக்கப்பட்ட 100 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு கடத்த ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி வெளியிட்டது. சென்னையில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடக்க போகுதா..? அப்படினா என்ன..? முழு விவரம் உள்ளே..!!
இந்த நாணயங்கள் மத்திய அரசின் இணையதளத்தில் விற்பனைக்கு வந்தன. நாணயம் ஒன்று ரூ.4,180 மற்றும் ரூ.4,470-க்கு விற்கப்பட்ட நிலையில், ஒரே நாளில் மொத்தமுள்ள 1,500 நாணயங்களும் விற்றுத் தீர்ந்தன. இதையடுத்து, அடுத்த வாரம் மீண்டும் கருணாநிதி நினைவு நாணயங்கள் விற்பனைக்கு வந்துவிடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



























