
காமராஜர் துறைமுகத்தில் ரூ.2,20,000/- ஊதியத்தில் வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!
காமராஜர் துறைமுக கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Company Secretary பணிக்கென காலியாக உள்ள ஒரே ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Company Secretary பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளது.
கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ACS தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசில் Psychologist வேலை – மாத சம்பளம்: ரூ.23,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.80,000/- முதல் ரூ.2,20,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 08.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

























