ஜே.இ.இ மெயின் நுழைவு தேர்வு புதிய விதிமுறைகள்- தேசிய தேர்வு முகமை வெளியீடு!!!

0
ஜே.இ.இ மெயின் நுழைவு தேர்வு புதிய விதிமுறைகள்- தேசிய தேர்வு முகமை வெளியீடு!!!
ஜே.இ.இ மெயின் நுழைவு தேர்வு புதிய விதிமுறைகள்- தேசிய தேர்வு முகமை வெளியீடு!!!
ஜே.இ.இ மெயின் நுழைவு தேர்வு புதிய விதிமுறைகள்- தேசிய தேர்வு முகமை வெளியீடு!!!

நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கான ஜே.இ.இ மெயின் நுழைவு தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வுகள் 4 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த தேர்வுக்கான சில விதிமுறைகளை தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.

ஜே.இ.இ மெயின் நுழைவு தேர்வு:

ஜே.இ.இ மெயின் நுழைவு தேர்வு 4 கட்டங்களாக நடைபெறும் எனவும் நாடு முழுவதும் 329 மையங்களில் தேர்வு நடைபெறுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இதில் முதற்கட்ட தேர்வுகள் பிப்ரவரி மாதம் 22 முதல் 25 வரை தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும். அதை தொடர்ந்து மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அடுத்தடுத்த கட்ட தேர்வுகள் நடைபெறுகின்றன.இந்த ஆண்டு நடைபெறும் ஜே.இ.இ மெயின் நுழைவு தேர்வுகான புதிய விதிமுறைகளை தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதன்படி 2019-ஆம் ஆண்டு ஜே.இ.இ தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் தேர்வு எழுத அனுமதி இல்லை.

நிதி நெருக்கடியில் ‘காமராஜ் பல்கலை’ – பேராசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல்!!

மேலும் தேர்வர்கள் ஒரு ஆண்டில் 4 முறை ஜே.இ.இ தேர்வுகளை எழுத முடியும் அதில் பங்குகொண்ட தேர்வர்கள் தாங்கள் 4 தேர்வுகளிலும் பெற்ற அதிகமான மதிப்பெண்களை வைத்து கணக்கிடப்படும். மேலும் ஜே.இ.இ தேர்வில் பி.இ , பி.டெக் படித்தவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் பிறகு அவர்களின் தேர்வு மதிப்பெண்களை வைத்து அட்வான்ஸ்டு தேர்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுவர்.

12ஆம் வகுப்பு மாணவர்கள் செல்போன் வாங்க ரூ.10 ஆயிரம் – மாநில அரசு அறிவிப்பு!!

ஏற்கனவே 12-ஆம் வகுப்பில் அறிவியல் பிரிவில் 75 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.2020-ஆம் ஆண்டு ஐஐடி யில் சேர்ந்தவர்களுக்கு தேர்வெழுத அனுமதி கிடையாது, 2020ஜே.இ.இ தேர்வு எழுதி வெற்றி பெற்று கொரோனா காரணமாக அட்வான்ஸ்டு தேர்வை எழுத முடியாதவர்கள் நேரடியாக 2021 ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வை எழுதலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here