நிதி நெருக்கடியில் ‘காமராஜ் பல்கலை’ – பேராசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல்!!

0
நிதி நெருக்கடியில் 'காமராஜ் பல்கலை' - பேராசிரியர்களுக்கு ஊதியம்
நிதி நெருக்கடியில் 'காமராஜ் பல்கலை' - பேராசிரியர்களுக்கு ஊதியம்
நிதி நெருக்கடியில் ‘காமராஜ் பல்கலை’ – பேராசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல்!!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக நிர்வாகம் பெரும் நிதி நெருக்கடியில் உள்ளது இதனால் அங்கு பணிபுரியும் பேராசிரியர்கள் மட்டும் பணியாளர்களுக்கு இரு மாதங்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்க முடியும் என்ற நிலை உருவாகி உள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் சார்பாக தகவல் வெளியாகியுள்ளது.

நிதி நெருக்கடி:

தென் மாவட்டங்களில் மிகப்பெரிய உயர்கல்வி நிறுவனமாக இருக்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தற்போது மிக பெரிய நிதி நெருக்கடியில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் என கற்பித்தலில் 1500 பணியாளர்களும், தொலைத்துறைகள்வி இயக்கம், தேர்வுத்துறை உள்ளிட்ட துறைகளில் 2000-க்கு மேற்பட்டோர் உள்ளனர். இவர்களை தவிர ஒப்பந்தம் அடிப்படையில் 500-க்கு மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் ஏற்கனவே பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

12ஆம் வகுப்பு மாணவர்கள் செல்போன் வாங்க ரூ.10 ஆயிரம் – மாநில அரசு அறிவிப்பு!!

பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் கட்டணம், தொலைநிலைக்கல்வி இயக்க மாணவர் சேர்க்கை கட்டணம் ஆகியவற்றை கொண்டே பல்கலைக்கழக நிர்வாகம் செயல்படுகிறது. மேலும் பல்கலைக்கழக மானியக்குழுவின் மூலம் திட்ட நிதி அவ்வப்போது வழங்கப்படுகிறது. இந்த நிதிகளை கொண்டே பணிபுரியும் அனைவருக்கும் ஊதியம் வழங்கப்படுகிறது.

தற்போது கொரோனா காலம் என்பதால் கல்லூரிகள் திறக்கப்படாமலும், தொலைதூர கல்வி மையங்கள் முதலில் நாடு முழுவதும் இருந்தது அதை குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்ட மாவட்டங்களில் மட்டும் செயல்படலாம் என்று அறிவித்த காரணத்தினால் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு பெரிய அளவில் வருவாய் இல்லை.

இது குறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் மு.கிருஷ்ணன் கூறுகையில்,” பல்கலைக்கழக ஊழியர்களுக்கு 6மாதங்களுக்கு ஊதியம் வழங்குவதில் பிரச்சனை இல்லை. அரசிடமிருந்து ஆண்டுக்கு ரூ.45 கோடி வரவேண்டிய இடத்தில் ரூ18 கோடி மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் நிதி நெருக்கடி ஏற்படுகிறது. இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.” இவ்வாறு அவர் அறிக்கையில் கூறினார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!