JEE மெயின் மே மாத தேர்வுகள் ஒத்திவைப்பு – மத்திய கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!

0
JEE மெயின் மே மாத தேர்வுகள் ஒத்திவைப்பு - மத்திய கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!
JEE மெயின் மே மாத தேர்வுகள் ஒத்திவைப்பு - மத்திய கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!
JEE மெயின் மே மாத தேர்வுகள் ஒத்திவைப்பு – மத்திய கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!

நாடு முழுவதும் உள்ள மத்திய கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளுக்கான JEE Main மே மாதத்திற்கான தேர்வுகள் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் ஒத்திவைக்கப்பட்ட உள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தேர்வுகள் ஒத்திவைப்பு:

நாடு முழுவதும் மத்திய கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஎன்டி போன்றவற்றில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வழங்க ஒவ்வொரு ஆண்டும் JEE தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு தேர்வுகளில் ஒரு புது மாற்றத்தை அறிமுகபடுத்தி 4 கட்டங்களாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதன்படி பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் இந்த தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பிப்ரவரி, மார்ச் மாத தேர்வுகள் திட்டமிட்டபடி நடந்து முடிந்த நிலையில், ஏப்ரல் மாதத்திற்கான தேர்வுகள் 27, 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது. மேலும் இதற்கான விண்ணப்ப பதிவும் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் கடந்த மாதத்தில் இருந்து சற்று அதிக வீரியத்துடன் உள்ளதால் அந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க அனுமதி – முதன்மை செயலாளர் அறிக்கை!!

இந்நிலையில் தற்போது JEE Main மே மாதத்திற்கான தேர்வுகள் 24, 25, 26, 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்த நிலையில், கொரோனா பரவல் குறையாமல் உள்ளதால் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here