நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம்.. ISRO தலைவர் வெளியிட்ட முக்கிய தகவல்..!!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும், இந்த புதிய ராக்கெட் ஏவுதளம் அடுத்த இரண்டாண்டுகளில் பயன்பாட்டிற்கு வரும் என்று ISRO தலைவர் வி. நாராயணன் தெரிவித்திருந்தார். இதற்காக குலசேகரன்பட்டினத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் 2,300 ஏக்கர் பரப்பளவு நில ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் ISRO அமைப்பு பற்றி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டியில் தனியார் தொழில்நுட்ப கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ISRO அமைப்பின் தலைவர் நாராயணன் “நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் மட்டுமல்லாமல் பருவநிலையை முன்கூட்டியே கணித்து விவசாயம், மனிதர்களை காப்பது” போன்ற பணிகளிலும் இஸ்ரோ ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், “வரும் 2035 ஆம் ஆண்டில் விண்வெளியில் கூடம் அமைக்க உள்ளதாகவும், அதன் முதற்கட்ட பணி வரும் 2028 ஆம் ஆண்டு தொடங்கும்” என கூறியுள்ளார்.



























