ISL லீக்கில் கோல் மழை.. டிராவில் முடிந்த முக்கிய போட்டி.. விவரம் உள்ளே!!
11வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (அக்டோபர் 4) நடைபெற்ற லீக் போட்டியில் கோவா மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில், கோவா அணியின் வீரர்கள் அர்மாண்டோ மற்றும் போர்ஜா ஆகியோர், 45 வது, 47 வது மற்றும் 90 வது நிமிடங்களில் கோல்கள் அடித்தனர்.
மகளிர் T20 உலகக்கோப்பை: தோல்வியுடன் தொடரை தொடங்கிய இந்தியா.. அரையிறுதிக்கு முன்னேறுமா??
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி வீரர்களும், 6 வது , 51 வது மற்றும் 56 வது நிமிடங்களில் கோல்கள் அடிக்க, போட்டியானது சமநிலையில் இருந்தன. இதையடுத்து இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை. இதன் காரணமாக 3-3 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமனில் முடிந்தது.



























