கோலின்றி முடிந்த சூப்பர் லீக்…, பலம் வாய்ந்த பெங்களூர் அணியை கட்டுப்படுத்தி அசத்திய எதிரணி!!
இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 11 வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், பெங்களூர் மற்றும் மும்பை சிட்டி அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று (அக்டோபர் 2) நடைபெற்றது. இதில், 11வது இடத்தில் இருக்கும் மும்பை சிட்டி அணி, முதலிடத்தில் உள்ள பெங்களூர் அணிக்கு ஈடுகொடுத்து விளையாடியது.
ICC மகளிர் T20 உலக கோப்பை இன்று (03.10.24) தொடக்கம்.. இந்திய அணியின் முதல் போட்டி எப்போது??
பலம் வாய்ந்த பெங்களூர் அணி, ஆட்டத்தின் முதல் பாதியில் மும்பை சிட்டி அணிக்கு எதிராக ஒரு கோல் அடிப்பதற்கு கடுமையாக போராடியது. ஆனாலும், ஆட்டத்தின் முதல் பாதி கோலின்றியே முடிந்தது. இதையடுத்து தொடங்கப்பட்ட 2வது பாதியில், மும்பை சிட்டி அணி கோல் அடிக்க முயற்சித்த போதும் பெங்களூர் அணி அதனை தடுத்துக் கொண்டே இருந்தது. இதனால், ஆட்ட நேர முடிவில், இரு அணிகளும் ஒரு கோல் கூட போடாத நிலை ஏற்பட, போட்டியானது 0-0 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

























