ICC மகளிர் T20 உலக கோப்பை இன்று (03.10.24) தொடக்கம்.. இந்திய அணியின் முதல் போட்டி எப்போது??
ICC மகளிர் T20 உலகக்கோப்பை தொடர் இன்று (அக்டோபர் 3) ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இத்தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 8 டி20 உலகக்கோப்பை தொடர்கள் நடைபெற்றுள்ளது. அதில் ஆஸ்திரேலியா அணி அதிகபட்சமாக 6 முறை (2010, 2012, 2014, 2018, 2020, 2023) உலகக்கோப்பையை வென்றுள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இங்கிலாந்து (2009), வெஸ்ட் இண்டீஸ் (2016) அணிகள் தலா ஒருமுறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. இத்தொடரின் முதல் ஆட்டத்தில் வங்கதேசம்-ஸ்காட்லாந்து அணிகள் மோதுகிறது. A பிரிவில் பலம் வாய்ந்த அணிகளுடன் உள்ள இந்திய அணி நாளை (அக்டோபர் 4) நடைபெற உள்ள தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.



























