சூடுபிடிக்கும் அரசியல் களம்.. விஜய்க்கு சீமான் ஆதரவா?? முழு விவரம் உள்ளே!!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விஜய் கடந்த பிப்ரவரி மாதம் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார். அதற்கு தமிழக வெற்றி கழகம் (TVK) என்று பெயர் சூட்டியுள்ளார்.இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 22 ம் தேதி இக்கட்சியின் கொடி மற்றும் பாடலை வெளியிட்டார். அதிலிருந்து தற்போது வரை அக்கட்சியின் கொடி மற்றும் பாடல் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளும் விமர்சனங்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது . இந்த பரபரப்பான சூழ்நிலையில் விஜய்க்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஓர் முக்கிய கருத்தை கூறியுள்ளார்.

அதில், விஜய் கொடி அறிமுகப்படுத்தியதில் என்ன சர்ச்சை? யானை ஆப்பிரிக்காவில் மட்டும் தான் இருக்கிறதா? இங்கு இல்லையா? யானையை எந்த ஒரு தனி மனிதனும், கட்சியும், மாநிலமும் சொந்தம் கொண்டாட முடியாது என்றார். மேலும் தேர்தல் ஆணையத்திடம் நான் புலி சின்னம் கேட்டேன். அது தேசிய விலங்கு என்றார்கள். மயில் கேட்டேன் தேசிய பறவை என்றார்கள். அப்படியென்றால் தேசிய மலர் தாமரையை மட்டும் ஏன் பாஜகவுக்கு கொடுத்தீர்கள் என்று கேட்டதாக கூறினார். சங்க காலத்தில் நாம் யானைப் படை தான் வைத்திருந்தோம். அப்படிப்பட்ட நாம் யானை படத்தை வைத்திருக்க முடியாதா? அந்த உரிமை என் தம்பிக்கு இல்லையா? என்று கேள்வி எழுப்பி தனது கருத்தை முடித்துள்ளார்.
























