IPL 2025: மும்பை அணியில் இருந்து ரோகித் சர்மா விலகல்?? அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 18 வது சீசனுக்கான எதிர்பார்ப்பு தற்போதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. அதன்படி இத்தொடருக்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும், ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு, நாளுக்கு நாள் சர்ச்சை அதிகரித்துக் கொண்டே வந்தது.
திருச்சியில் நாளை (13.09.24) மின்தடை… ஏரியா லிஸ்ட் வந்தாச்சு.. உடனே பாருங்க!!
இந்நிலையில் அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா குறித்து ஓர் முக்கிய தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அதாவது ரோகித் சர்மா வரும் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாட மாட்டார் என்றும், அவர் லக்னோ அணிக்கு செல்லலாம் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். மும்பை அணிக்கு 10 ஆண்டுகளாக தலைமை தாங்கி 5 கோப்பைகளை வென்று கொடுத்தவர் ரோகித் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.



























