IRCTC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 – தேர்வு கிடையாது || முழு விவரங்களுடன்!

3
IRCTC ?????????? ????? ???????????? 2024 - ?????? ???????? || ???? ????????????!
IRCTC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 - தேர்வு கிடையாது || முழு விவரங்களுடன்!

IRCTC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 – தேர்வு கிடையாது || முழு விவரங்களுடன்!

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் ஆனது Computer Operator and Programming Assistant பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 8 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் (Merit List)  தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

IRCTC காலிப்பணியிடங்கள்:

Computer Operator and Programming Assistant பணிக்கென காலியாக உள்ள 08 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / ITI  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

IRCTC வயது வரம்பு:

15 வயது பூர்த்தியான 25 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

NTPC நிறுவனத்தில் Associate காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.5,000/- முதல் ரூ.9,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IRCTC தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் (Merit List) தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 17.12.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!