4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு.. முழு விவரம் உள்ளே!!
தமிழக அரசு துறைகளில் சமீப காலங்களாக பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது. அரசு துறைகளை திறமையாக நிர்வகிக்கும் வகையில் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் கிட்டத்தட்ட 10 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இதுவே சரியான தீர்ப்பு..!! இனி பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5,000 ரூபாய் அபராதம்..!!
இந்நிலையில், தற்போது 4 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஐபிஎஸ் அதிகாரி சந்தோஷ் ஹதிமானி சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை பரங்கிமலை துணை ஆணையராக எஸ்.செல்வநாகரத்தினம் நியமனம், தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக கே.பிரபாகர் நியமனம், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எம்.சுதாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.



























