IPL Mega Auction: ஏலத்தில் முக்கியமான RTM.. சென்னை அணிக்கு கைகொடுக்குமா??
2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் இன்றும் (நவம்பர் 24), நாளையும் (நவம்பர் 25) நடைபெறுகிறது. இந்நிலையில் ஆர்டிஎம் (RTM) குறித்து விரிவாக பார்க்கலாம். அதாவது (Right-to-Match) என்பது வீரர் ஒரு அணியில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் ஏலத்தின் போது, அவரை தக்கவைக்க உதவும். (எடுத்து.காட்டு) டெல்லி அணியில் விளையாடிய பண்ட்டை ₹10 கோடிக்கு சென்னை அணி வாங்கினாலும், RTM பயன்படுத்தி டெல்லி அவரை தக்கவைக்கலாம். ஆனால், விலையை சென்னை ₹13 கோடியாக உயர்த்தினால், அவ்விலையை கொடுத்தே, பண்ட்டை டெல்லி அணியால் தக்கவைக்க முடியும். இல்லையேல் பண்ட் சென்னை அணியில் விளையாடுவார்.
























