எங்கு நடக்கிறது IPL 2025 மெகா ஏலம்?? வெளியான முக்கிய அப்டேட்!!
இந்தியன் பிரீமியர் லீக் 2025 தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இத்தொடரின் மெகா ஏலத்திற்கான வீரர்களை தக்க வைக்கும் விதிகளை செப்டம்பர் கடைசி வாரத்தில் பிசிசிஐ நிர்வாகம் அறிவித்தது. அதன்படி வரும் அக்டோபர். 31 ஆம் தேதிக்குள் அணிகள் தங்கள் தக்கவைக்கும் வீரர்களை அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
தற்போது மெகா ஏலம் தொடர்பாக ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது IPL 2025 சீசனுக்கான மெகா வீரர்கள் ஏலம் வரும் நவம்பர் மாத இறுதியில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிலும் சவுதி அரேபியாவின் ரியாத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் ஆகிய நகரங்களில் ஏலத்தை நடத்த பிசிசிஐ பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது .
























