IOCL ஆணையத்தில் Revenue Assistant காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!
Revenue Accountant & Revenue Assistant பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
IOCL காலிப்பணியிடங்கள்:
Revenue Accountant & Revenue Assistant பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் பணியின் அடிப்படையில் Deputy Collector, Tahsildar, Assistant Director of Survey, Inspector of Survey அதற்கு இணையான பதவிகளில் அல்லது Tahsildar, Deputy Tahsildar, Sub-Inspector of Survey, Deputy Inspector of Survey, FMS மற்றும் அதற்கு இணையான பதவிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.
IOCL வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
பிரசார் பாரதியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2025 -விண்ணப்பிக்க தவறாதீர்கள் || முழு விவரங்களுடன்!
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.31600/- முதல் ரூ.36400/- வரை ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
IOCL தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


























