சர்வதேச செய்திகள் – ஆகஸ்ட் 2018

0

சர்வதேச செய்திகள் – ஆகஸ்ட் 2018

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்ட் 2018

இங்கு ஆகஸ்ட் மாதத்தின் சர்வதேச செய்திகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

சர்வதேச செய்திகள் – ஆகஸ்ட் 2018 PDF Download

சர்வதேச செய்திகள்:

ஜிம்பாப்வே தேர்தல் முடிவு

 • ஜிம்பாப்வே ஆளும் ZANU-PF கட்சி பெரும்பான்மை பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சட்டவிரோத வெளிநாட்டு ஊழியர்களுக்கு பொது மன்னிப்புத் திட்டத்தை தொடங்குகிறது

 • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒரு மூன்று மாத விசா மன்னிப்பு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது, இது இந்தியர்களை உள்ளடக்கிய நூற்றுக்கணக்கான சட்டவிரோத வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பயனளிக்கும்.

காங்கிரஸ் தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டம் 2019-யை நிறைவேற்றியது பாகிஸ்தானுக்கான அமெரிக்க உதவித் தொகையை குறைத்தது

 • தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டம் 2019 (NDAA-19)யை நிறைவேற்றியது அமெரிக்க காங்கிரஸ், பாகிஸ்தானுக்கான அமெரிக்க உதவித் தொகையை 150 மில்லியன் டாலராகக் குறைத்தது.

சீனாவில் தேடுபொறியின் தணிக்கை செய்யப்பட்ட பதிப்பை கூகுள் திட்டமிடுகிறது

 • ஆல்பபெட் இன்கின் கூகுள் சீனாவில் வலைத்தளங்கள் மற்றும் சில தேடல் சொற்களை தடுக்க தேடுபொறியின் தணிக்கை செய்யப்பட்ட பதிப்பை திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் “டிராகன்ஃப்லை” என்று பெயரிடப்பட்டுள்ளது.

விரைவில் அட்டாரி-வாகா எல்லைக்குள் புதிய கதவுகள்

 • இரு நாடுகளிலிருந்தும் தேசிய கொடியை கீழே இறக்குவதைக்காண ஒவ்வொரு மாலையும் மக்கள் திரண்டு வரும் இந்தியா, பாகிஸ்தான் அட்டாரி-வாகா எல்லையில் புதிய வாயில்களை நிறுவ திட்டமிட்டுள்ளது.

வெப்பமண்டல புயல் ஷாங்காயை தாக்கியது

 • ஜோங்டரி,கொரிய மொழியில் ஸ்கைலார்க் (வானம்பாடி) எனும் புயல் சீன நிதி மையத்தை தாக்கும் 12 வது சூறாவளி.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய பங்குச் சந்தையாக ஜப்பான் முன்னேற்றம்

 • உலகின் மிகப்பெரிய பங்கு 31 டிரில்லியன் டாலர் அமெரிக்கா அடுத்தபடியாக ஜப்பான் (6.17 ட்ரில்லியன் டாலர்) சீனா ($ 6.09 டிரில்லியன்) முதல் மூன்று பங்குச் சந்தை இடத்தைப் பெற்றுள்ளது

அட்லாண்டிக் பெருங்கடலை யு.எஸ். ஆசிரியர் தனியாகப் படகில் கடந்தார்

 • சின்சினாட்டி, ஓஹியோ உயர்நிலைப் பள்ளி ஆசிரியரான ப்ரைஸ் கார்ல்சன், அட்லாண்டிக் பெருங்கடலை தனியாகப்படகில் – 38 நாட்கள், ஆறு மணிநேரம் 49 நிமிடங்களில் மேற்கு-கிழக்கு கடந்து சாதனை அமைத்துள்ளார்.

யு.கே. இந்திய வம்சாவளி உறுப்பு பற்றாக்குறையை எதிர்கொள்ள புதிய உறுப்பு நன்கொடைத் திட்டம் அறிமுகம்

 • நாட்டில் உள்ள இந்திய வம்சாவளி சமூகங்களுக்குள் உறுப்புகளின் அவசரத் தேவைக்காக உறுப்பு மற்றும் திசு நன்கொடைக்கான சட்டத்தை மாற்றுவதற்கு யு.கே. அரசு புதிய திட்டத்தை அறிவித்தது.

மாலத்தீவில் உலகின் முதல் ஊடுருவல் கலைக்கூடம் திறப்பு

 • மாலத்தீவில் பவளப்பாறை மற்றும் பிற கடல் இனங்கள் வசிப்பிடமாக சுமார் 30 சிற்பங்கள் நிறைந்த கொரலேரியம் (Coralarium), ஒரு உட்புற கலைக்கூடம், திறக்கப்பட்டது.

சிரியா அகதிகள் குழுவொன்றை அமைக்கவுள்ளது

 • நாட்டின் ஏழு வருட மோதலில் இருந்து நாட்டைவிட்டு தப்பியோடிய கோடிக்கணக்கான மக்களை ஒருங்கிணைப்பதற்கு ஒரு குழுவை அமைக்கவுள்ளது சிரிய அரசு.

முதல் ஹைபர்சோனிக் விமானத்தை சீனா வெற்றிகரமாக பரிசோதித்தது

 • அணுசக்தி ஆயுதங்களை எடுத்துச்செல்லும் மற்றும் எந்த தற்போதைய தலைமுறை எதிர்ப்பு ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளிலும் ஊடுருவக்கூடிய சீனாவின் முதலாவது ஹைபர்சோனிக் விமானத்தை(க்ஸிங்காங்-2 அல்லது ஸ்டார்ரி ஸ்கை-2) சீனா வெற்றிகரமாக பரிசோதித்தது.

சீனாவில் பன்றித் தபால் தலைகள் வெளியிடப்பட்டன

 • பன்றி ஆண்டை முன்னிட்டு 2019ஆம் ஆண்டு வெளியிடப்படவுள்ள தபால் தலையின் வடிவமைப்பை சீன தபால் வெளியிட்டது. இந்த வடிவமைப்பில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு புன்னகை பன்றிகள் மற்றும் அவற்றின் மூன்று மகிழ்ச்சியான பன்றிகளைக் கொண்டுள்ளது.

அதிகளவில் மக்கள் குடிபெயர்வதால் பிரேசில் வெனிசுலாவினற்கு எல்லைகளை மூடியது

 • அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியால் தென் அமெரிக்க நாட்டிலிருந்து அதிகளவில் மக்கள் குடிபெயர்வதை குறைக்க பிரேசில் தனது வடக்கு எல்லையை வெனிசூலாவினற்கு மூடியது.

சூறாவளி ஹெக்டர் ஹவாயை நெருங்குகிறது

 • சூறாவளி ஹெக்டரை எதிர்கொள்ள ஹவாய் பெரிய தீவு தயார்நிலையில் உள்ளது

பாகிஸ்தானிய துருப்புக்கள் ரஷ்ய இராணுவ நிறுவனங்களில் பயிற்சி பெறவுள்ளனர்

 • பாகிஸ்தான் துருப்புக்கள் ரஷ்ய இராணுவ பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற அனுமதிக்க பாகிஸ்தான் மற்றும் ரஷ்யா உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன, அவை இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை அதிகரிக்கும் நோக்கம் கொண்ட ஒரு நடவடிக்கையாகும்.

டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் முக அங்கீகாரம் பயன்படுத்தப்படவுள்ளது

 • அனைத்து இடங்களிலும் பாதுகாப்பை அதிகரிக்க முக அங்கீகாரத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முதல் ஒலிம்பிக்ஸ் டோக்கியோ 2020.

சவுதி அரேபியா கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை தடை செய்தது

 • கனடாவுடன் சவூதி அரேபியா உறவுகளை முடக்கியது, புதிய வர்த்தக ஒப்பந்தங்களையும் தடை செய்தது.

அமெரிக்கா ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடைகளை சுமத்த உள்ளது

 • மாஸ்கோ பிரிட்டனில் உள்ள முன்னாள் ரஷ்ய முகவர் மற்றும் அவரது மகளுக்கு எதிராக நரம்பு முகவர் ஒன்றை பயன்படுத்தியிருப்பதை உறுதிப்படுத்திய பின்னர், வாஷிங்டன் ரஷ்யா மீது புதிய தடைகளை சுமத்தவுள்ளது.

இந்தோனேசிய தீவு நிலநடுக்கத்தினால் 10 அங்குலம் உயர்ந்தது

 • 300க்கும் மேற்பட்ட மக்களைப் பலிகொண்ட சக்தி வாய்ந்த இந்தோனேசிய பூகம்பம் அந்தத் தீவை 25 சென்டிமீட்டர் (10 அங்குலம்) உயர்த்தியதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

 இந்தியா – ஆஸ்திரேலியா தத்தெடுப்பு திட்டம்

 • உள் நாடு தத்தெடுப்பு தொடர்பான ஹேக் ஒப்பந்தத்தின் படி இந்தியாவுடன் தத்தெடுப்பு திட்டத்தைத் தொடர ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது.

கம்போடியாவின் ஆளும் கட்சி அனைத்து நாடாளுமன்றஇடங்களையும் வென்றது

 • கம்போடியாவின் ஆளும் கம்போடியன் மக்கள் கட்சி பொதுத் தேர்தலில் 125 நாடாளுமன்ற இடங்களை வென்றது.

சீனா உலக வர்த்தக அமைப்பில் அமெரிக்காவின் வரிகளை சவால் செய்கிறது

 • உலகின் இரண்டு பொருளாதார நிறுவனங்களுக்கிடையிலான வர்த்தக யுத்தத்தின் சமீபத்திய உச்சக்கட்டத்தில் சோலார் பேனல் இறக்குமதியில் சீனா உலக வர்த்தக அமைப்பில் (WTO) அமெரிக்காவின் வரிகளை எதிர்த்து ஒரு புகாரை தாக்கல் செய்துள்ளது.

ரஷ்யா சீனா விவசாயிகளுக்கு உதவுகிறது

 • சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக யுத்தம் அதிகரிக்கையில், சோயாபீன்கள் மற்றும் பிற விவசாய உற்பத்திகளை வளர்ப்பதற்கு ஒரு மில்லியன் ஹெக்டேர் நிலம் வழங்குவதன் மூலம் ரஷ்யா பெய்ஜிங்கின் விவசாயிகளுக்கு உதவுகிறது.

புளோரிடாவின் வளைகுடா கோஸ்ட்டின் நச்சு ஆல்கா ப்ளூம்

 • ரெட் அலை, சுவாச பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு நச்சு ஆல்கா வளர்ந்து மெக்ஸிகோ வளைகுடா முழுவதும் பரவுகிறது. நீரில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் டினோபிளாஜெல்லேட் என்று அழைக்கப்படும் ஒரு உயிரினத்தின் காரணமாக ரெட் அலை ஏற்படுகிறது.

டிரான்ஸ்ஜன்டர் வேட்பாளர் யு.எஸ் மாநில கவர்னராகத் தேர்வு

 • கிறிஸ்டின் ஹால்விஸ்ட் யு.எஸ். மாநில வெர்மான்ட் மாநிலத்தில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக நியமனம் பெற்றார், இதன் மூலம் இவர் நாட்டின் முதல் திருநங்கை கவர்னராக ஆனார்.

பாகிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமராக இம்ரான்கானை ஆதரித்தனர்

 • மக்கள் ஆட்சிக்கு அடையாளமாக பாகிஸ்தான் சட்டமியற்றுபவர்கள் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் மற்றும் நீண்டகால அரசியல்வாதியான இம்ரான் கானை நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுத்தனர்.

வரலாற்று எசலா மகா பெரேராவின் பத்து நாள் திருவிழா தொடங்கியது

 • இலங்கையில், வரலாற்று எசலா மகா பெரேராவின் பத்து நாள் திருவிழா, கண்டி நகரில் பெரும் ஊர்வலத்துடன் தொடங்கியது. இலங்கையிலுள்ள பௌத்த திருவிழாக்களில் எசலா பெரேராவும் மிகப் பழமையானதும், மிகப்பெரியதும் ஆகும்.

கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அவசரக் குழு ஒன்றை அமைத்தது

 • கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எமிரேட்ஸ் ரெட் க்ரெசண்ட் தலைமையில் ஒரு அவசரக் குழு ஒன்றை அமைத்துள்ளது.

சவூதி அரேபியா வருடாந்திர முஸ்லீம் ஹஜ் புனித யாத்திரைக்கு தயாராகிறது

 • வருடாந்திர ஹஜ் புனித யாத்திரைக்கு சவூதி அரேபியா தயாராகி வருகிறது, ஏனெனில்6 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லீம் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்துள்ளனர்.

கோபி அன்னான் 80 வயதில் மறைந்தார்

 • ஐக்கிய நாடுகளின் முன்னாள் செயலாளர் கோபி அன்னான் 80 வயதில் மறைந்தார்

இம்ரான் கான் பிரிட்டிஷ் பிரதமர் மேயின் உதவியை நாடினார்

 • பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மேவுடன் உரையாடலின் போது பணமோசடி அச்சுறுத்தலை எதிர்கொள்ள இம்ரான் கான் இங்கிலாந்தின் உதவியை நாடினார்.

நியூயார்க் நகரத்தில் இந்திய சுதந்திர தின அமெரிக்க கொண்டாட்டத்தை நடத்துகிறது

 • இந்தியாவுக்கு வெளியே இந்திய சுதந்திரத்தின் மிகப்பெரிய வருடாந்திரக் கொண்டாட்டத்தை நியூ யார்க் நகரத்தில் நடக்கிறது.

ஆப்கானிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு தாலிபனை ரஷ்யா வரவேற்கிறது

 • செப்டம்பர் 4ம் தேதி ஆப்கானிஸ்தானில் சர்வதேச சமாதானப் பேச்சு வார்த்தைகளை தயாரித்து வருவதாகவும், தாலிபனை அழைத்ததாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது

மலை எதிரோலி இலக்கிய விழாவின் 9 வது பதிப்பு

 • மலை எதிரோலி இலக்கிய விழாவின் ஒன்பதாவது பதிப்பு பூட்டானில் உள்ள திம்புவில் தொடங்கியது

பாகிஸ்தான் ஜனாதிபதி, பிரதமர் முதல் வகுப்பில் விமான பயணம்செய்ய பாகிஸ்தான் அமைச்சரவை தடை விதித்தது

 • ஜனாதிபதி, பிரதம மந்திரி, மேல்அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் அரசு நிதி மற்றும் முதல்-வகுப்பு விமான பயணத்தை பாகிஸ்தானின் புதிய அரசாங்கம் தடை செய்துள்ளது.

ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான மியான்மர் இராணுவஒடுக்குமுறையின் முதலாம் ஆண்டு நினைவு

 • பல்லாயிரக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் மீதான மியான்மர் இராணுவ ஒடுக்குமுறையின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு “நீதி” வேண்டி கோபமான போராட்டத்தை நடத்தினர்.

விமான நிலையங்களில் ‘செல்வாக்குள்ள மக்களுக்கான’ விஐபிநெறிமுறைக்கு பாகிஸ்தானின் புதிய அரசு தடை விதித்துள்ளது

 • புதிய அரசாங்கத்தின் எளிமை திட்டத்தின் ஒரு பகுதியாக விமான நிலையங்களில் அரசியல்வாதிகள், நீதிபதிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் உட்பட “செல்வாக்குமிக்க மக்களுக்கான” விஐபி கலாச்சாரத்திற்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் சிந்து வாட்டர் ஒப்பந்தத்தின் பேச்சுவார்த்தையை தொடரவுள்ளது

 • லாகூரில் சிந்து வாட்டர் ஒப்பந்தத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளது, பிரதம மந்திரி இம்ரான் கான் பதவி ஏற்றபின் முதல் இருதரப்பு கூட்டம் இதுவாகும்.

ஹனோயில் ‘ஜெய்பூர் கால்‘ முகாம் 

 • வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வியட்நாமின் ஹனோயில் ‘ஜெய்ப்பூர் கால் முகாமைத்’ திறந்து வைத்து, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலவச ப்ரோஸ்தெடிக் கால்களைப்பெற்ற 500 வியட்நாம் பயனாளிகளை சந்தித்தார்.

சீனாவின் மழலையர் பள்ளிகளில் ரோபோ ஆசிரியர்கள்

 • கீகோ என்ற தன்னியக்க ரோபோ பல மழலையர் பள்ளிகளில் வெற்றி பெற்றது, கதைகள் மற்றும் தர்க்க ரீதியிலான கணக்குகளைக் கொண்டு குழந்தைகளிடம் சவால் செய்தது.

PDF Download

பொது அறிவு பாடக்குறிப்புகள்  PDF Download

பாடம் வாரியான குறிப்புகள் PDF Download

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல்ஜூலை 2018

 

 1. ஜூலை 2018 நடப்பு நிகழ்வுகள்
 2. ஜூன் 2018 நடப்பு நிகழ்வுகள்
 3. மே 2018 நடப்பு நிகழ்வுகள்
 4. ஏப்ரல் 2018 நடப்பு நிகழ்வுகள்

Whatsapp குரூபில் சேர – கிளிக் செய்யவும்

Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here