2023 – 24 முதல் காலாண்டில் திருத்தப்பட்டுள்ள வட்டி விகிதங்கள் – முக்கிய விவரங்கள் இதோ!

0
2023 - 24 முதல் காலாண்டில் திருத்தப்பட்டுள்ள வட்டி விகிதங்கள் - முக்கிய விவரங்கள் இதோ!
2023 - 24 முதல் காலாண்டில் திருத்தப்பட்டுள்ள வட்டி விகிதங்கள் - முக்கிய விவரங்கள் இதோ!

2023 – 24 முதல் காலாண்டில் திருத்தப்பட்டுள்ள வட்டி விகிதங்கள் – முக்கிய விவரங்கள் இதோ!

2023 – 2024 புதிய நிதியாண்டில் பல்வேறு புதிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறித்த விவரங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

வட்டி விகிதங்கள்:

புதிய நிதியாண்டின் தொடக்கத்தில் உள்ள ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் பல்வேறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்த திட்டங்களை சேர்ந்த பயனர்களுக்கு மாறுப்பட்ட பலன்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, நடப்பு காலாண்டில் பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் பிற ஒத்த நிதிகள் 7.1% வட்டி வழங்கப்பட உள்ளது. PPF இன் வட்டி விகிதம் நடப்பு நிதியாண்டிலும் மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை செய்ய வேண்டிய கேம் பட்டியல் – தீவிரமாகும் பணிகள்!

GPF மற்றும் பிற ஒத்த நிதிகளுக்கான வட்டி விகிதம் நடப்பு காலாண்டில் 7.1% ஆக ஏப்ரல் 1 ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதே போல், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் வட்டி விகிதம் 8% ல் இருந்து தற்போது 8.2% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டம் 7% ல் இருந்து வட்டியை 7.7% ஆக உயர்த்தியுள்ளது. சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் 7.6% ல் இருந்து 8% ஆகவும், ஐந்தாண்டு கால வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் 7% ல் இருந்து 7.5% ஆகவும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!