ரயில் டிக்கெட் புக் செய்ய இனி கூட்டத்தில் சிக்க அவசியம் இல்லை – QR கோடு அவசியம்!
நாடு முழுவதும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. இதனால் QR குறியீடு மூலம் டிக்கெட் புக் செய்யும் வசதி பல ரயில் நிலையங்களில் அறிமுகமாகியுள்ளது. முதல் கட்டமாக வடகிழக்கு எல்லை ரயில்வே அதன் ஐந்து பிரிவுகளில் 588 QR கோடு முன்பதிவு கவுன்டர்களை பொருத்தியுள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மேற்கு வங்கத்தின் 7 மாவட்டங்கள் மற்றும் வடக்கு பீகாரின் 5 மாவட்டங்களில் இந்த முன்பதிவு கவுன்டர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வங்கியில் டெபாசிட் செய்தால் இவ்வளவு வட்டியா? இது நல்லா இருக்கே!
இந்நிலையில், ரயில்வேயின் இந்த நடவடிக்கை, வடகிழக்கு எல்லை ரயில்வே நெட்வொர்க்கிற்குள் உள்ள அனைத்து முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களிலும் எந்தவித இடையூறும் இல்லாமல் டிஜிட்டல் பேமெண்ட் முறையில் டிக்கெட் எடுக்கும் வசதியை உறுதி செய்கிறது என வடகிழக்கு எல்லை ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி (CPRO) கபிஞ்சல் கிஷோர் சர்மா கூறியுள்ளார். இதனால் பண்டிகைக் காலங்களில் முன்பதிவுக்காக கூட்ட நெரிசல் ஏற்படாமல் எளிதாக டிக்கெட் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

























