
ரயிலில் பயணம் செய்ய போறீங்களா..?? அப்போ இந்த வசதிகள் எல்லாம் உங்களுக்கு இலவசம்..!! அது என்ன வசதின்னு தெரிய இத படிங்க..!!
இந்திய ரயில்வே ஒரு பொதுத்துறை நிறுவனமாகவும் , மேலும் நாட்டில் மிகப்பெரிய சேவை வழங்கும் அமைப்பாகவும் இருந்து வருகிறது. இந்த , இந்திய ரயில்களில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய ரயில்வே துறை அதன் பயணிகளுக்கு 6 சிறந்த வசதிகளை இலவசமாக வழங்குகிறது. அத்தகைய வசதிகளை பற்றி கீழே விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.
- இந்திய ரயில்வே மூத்த குடிமக்களுக்கு பல்வேறு சலுகை டிக்கெட்டுகளை அறிவித்து, பயணிகளுக்கு பல வசதிகளை இலவசமாக வழங்கி வருகிறது.
- ரயில்வே தனது பயணிகளுக்கு ஏதுவாக 6,000 நிலையங்களில் இலவச WIFI வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
- ரயில்களில் ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு பெட்ஷீட் , கம்பளி மற்றும் தலையணையை இலவசமாக வழங்குகிறது.
TET தேர்வாளர்களின் கவனத்திற்கு…!! உங்களுக்காகவே Free Mock Test…!! முழு விவரம் உள்ளே…!!
- முக்கிய ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் 1 மாதம் வரை அவர்களின் பொருட்களை இலவசமாக ரயில்களில் உள்ள லாக்கரில் வைத்து கொள்ளலாம்.
- ரயில் பயணத்தின் போது ஒருவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தால் அவசர காலங்களில் மருத்துவர் மற்றும் பிற மருத்துவ உதவிகளையும் வழங்குகிறது. மேலும், ஆபத்தான சூழ்நிலையில் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவமனை போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்கிறது.
உங்கள் ரயில் தாமதமாகி நீங்கள் ஸ்டேஷனில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டால் காத்திருப்போர் அறையில் உங்கள் ரயில் வரும் வரை காத்திருக்க ஏற்பாடு செய்துள்ளது .
மேலும், இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள EXAMSDAILY என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.


























