TNPSC Indian Constitution in Tamil PDF
What is the Indian Constitution?
பொதுவாக, அரசியலமைப்பு என்பது ஒரு அரசாங்கத்தின் ஆட்சி, அதிகாரங்கள், கட்டமைப்புகள், கடமைகள் அத்துடன் அந்த குடிமக்களின் அடிப்படை உரிமைகளை வரையறுத்து வழங்கும் சட்ட விதிகளின் தொகுப்பாகும். மேலும், இதுவே ஒரு நாட்டின் உச்சமாகும்.
Need for the Indian Constitution :
பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து, இந்திய விடுதலை பெற்ற பின், பன்முக தன்மை கொண்ட இந்திய நாட்டு மக்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து அனைவருக்கும் சமமான அடிப்படை உரிமைகளை வழங்குவதற்கும், ஒரு சிறந்த அரசாங்க கட்டமைப்பை உருவாக்கி, மத்திய மாநிலங்களிடையே அதிகாரங்களை பகிர்ந்தளித்து ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்க இந்தியாவிற்கென தனி அரசியலமைப்பை உருவாக்க வேண்டிய தேவை இருந்தது.
TNPSC Polity Study Materials in Tamil – PDF Download
Formation of the Indian Constitution:
- கேபினெட் தூதுக்குழுவின், பரிந்துரையின் படி இந்திய அரசியலமைப்பு குழு 16.05.1946 அன்று உருவாக்கப்பட்டது.
- இந்த அரசியலமைப்பு குழுவில் மொத்தம் 389 உறுப்பினர்கள் இருந்தனர். அவர்களில், 292 பேர் தேர்தல் மூலமும், 93 பேர் நியமனம் மூலமும், 4 பேர் தலைமை கமிஷனர் பதவியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- இந்த அரசியலமைப்பு நிர்ணய சபை, 13 குழுக்களாக பிரிக்கப்பட்டது.
- மேலும், இந்த அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் , 9.12.1946 அன்று நடைபெற்றது.
- அப்போது, அக்குழுவின் தற்காலிக தலைவராக டாக்டர். சச்சிதானந்த சின்ஹா தேர்வு செய்யப்பட்டார்.
- மேலும், இக்கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் போதே அவர் மறந்ததை தொடர்ந்து, 11.12.1946 அன்று டாக்டர். ராஜேந்திரா பிரசாத் முதல் நிரந்தர தலைவராகவும், H.C. முகர்ஜி மற்றும் T.C.கிருஷ்ணமாச்சாரி துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- அதன் பின், 13.12.1946 அன்று ஜவகர்ஹால் நேரு , இந்திய அரசியலமைப்பிற்கான முகவுரையை வழங்கினார்.
- அரசியல் நிர்ணய சபை 22 குழுக்களை கொண்டு இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டது.
- அதன் பின், 29.08.1947 தேதி அன்று டாக்டர். அம்பேத்கர் தலைமையில் வரைவு குழு அமைக்கபட்டது. இவரது தலைமையில், இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த குழுவின் சட்ட ஆலோசகராக பி.என்.ராவ் இருந்தார்.
- இந்த அரசியலமைப்பு குழு, இந்திய அரசியலமைப்பை உருவாக்க 2 ஆண்டுகள் 11 மாதங்கள், 18 நாட்கள் தேவைப்பட்டன.
- பின்னர், அரசியல் அமைப்பு குழுவிலுள்ள 284 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு இந்திய அரசியல் அமைப்பு 26.11.1949 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- அதன் பின், எழுதப்பட்ட இந்த இந்திய அரசியலமைப்பு சட்டம், பல்வேறு தரப்பினரால் விவாதிக்கப்பட்டு, இறுதியாக முகவுரை, 22 பாகங்கள், 395 சட்டப்பிரிவுகள் மற்றும் 8 அட்டவணைகளை கொண்ட இந்திய அரசியலமைப்பு 26.01.1950 அன்று நடைமுறைக்கு வந்தது. மேலும், இந்த நாள் ஒவ்வொரு வருடமும் குடியரசு தினமாக கொண்டப்படுகிறது.
- நாட்டின் மூல அச்சாணியாக விளங்கும் இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய குழுவின் தலைவராக விளங்கிய டாக்டர். அம்பேத்கர் “இந்திய அரசியலமைப்பின் தந்தை” எனவும், “இந்திய அரசியலமைப்பின் சிற்பி” எனவும் அழைக்கப்படுகிறார்.
Indian Constitution – Important Notes
இந்திய அரசியலமைப்பு – சில முக்கிய குறிப்புகள் |
|
|
இந்திய அரசியலமைப்பு குழு உருவாக்கப்பட்ட நாள் |
16 மே 1946 |
|
மொத்த உறுப்பினர்கள் |
389 (292 பேர் தேர்தல் மூலமும், 93 பேர் நியமனம் மூலமும், 4 பேர் தலைமை கமிஷனர் பதவியில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்) |
|
முதல் கூட்டம் |
9 டிசம்பர் 1946 |
|
இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் தற்காலிக தலைவர் |
டாக்டர். சச்சிதானந்த சின்ஹா |
|
இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் நிரந்தர தலைவர் |
டாக்டர். ராஜேந்திரா பிரசாத் |
|
வரைவு குழு அமைக்கப்பட்ட நாள் |
29 ஆகஸ்ட் 1947 |
|
வரைவு குழுவின் தலைவர் |
டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர் |
|
வரைவு குழுவின் சட்ட ஆலோசகர் |
பி.என்.ராவ் |
|
அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் |
26 நவம்பர் 1949 |
|
நடைமுறைப்படுத்தப்பட்ட நாள் |
26 ஜனவரி 1950 |
|
அறிமுகப்படுத்தப்பட்ட போது இந்திய அரசியலமைப்பின் ஆவணங்கள் |
முகவுரை, 22 பாகங்கள், 395 சட்டப்பிரிவுகள் மற்றும் 8 அட்டவணைகள் |
|
இந்திய அரசியலமைப்பின் தந்தை |
டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர் |
Join the ExamsDaily WhatsApp Group
The Constitution of India was written and drafted by the Constituent Assembly, where Dr. B.R. Ambedkar was chairman of the Drafting Committee, and B.N. Rau was the Constitutional Advisor to the Constituent Assembly
The Constitution of India was adopted by the Constituent Assembly on 26 November 1949, and it came into effect on 26 January 1950.
299 Members were involved in writing the Indian Constitution.
Now, the Constitution of India currently has 448 articles
On 21 February 1948, the Constituent Assembly submitted its first draft Constitution of India to the president of the Constituent Assembly
























