T20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு.. கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுர் நியமனம்!!
2024 T20 உலக கோப்பை தொடர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த மாதம் வெளியிட்டது. அந்த வெளியான அறிவிப்பின் மூலம் இத்தொடர் வரும் அக்டோபர் 3ம் தேதி முதல் தொடங்கவுள்ளதை நாம் அறிவோம். மேலும் இத்தொடரின் இறுதிப் போட்டி வரும் அக்டோபர் 20 ஆம் தேதி அரங்கேற உள்ளது.
இத்தொடர் மொத்தமாக 23 T20 போட்டிகளை கொண்டுள்ளது. இந்த நிலையில் இத்தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ நிர்வாகம் அறிவித்துள்ளது. அதில் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுரும், துணை கேப்டனாக ஸ்மிருதி மந்தனாவும் செயல்பட உள்ளனர். 2024 T20 உலக கோப்பைக்கான இந்திய அணியை கீழ் காணலாம்.
T20 உலக கோப்பை அட்டவணை வெளியீடு.. இந்திய அணி விளையாடும் போட்டிகள் விவரம்!!
2024 T20 உலக கோப்பைக்கான இந்திய அணி:
ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷஃபாலி வர்மா, தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் , யாஸ்திகா பாட்டியா, பூஜா வஸ்த்ரகர், அருந்ததி ரெட்டி , ரேணுகா சிங் தாக்கூர், தயாளன் ஹேமலதா, ஆஷா சோபனா, ராதா யாதவ், ஸ்ரேயங்கா பாட்டீல், சஜனா சஜீவன்.
பயண இருப்புக்கள்:
உமா செத்ரி, தனுஜா கன்வர், சைமா தாகூர்
பயணம் செய்யாத இருப்புக்கள் :
ரக்வி பிஸ்ட், பிரியா மிஸ்ரா
























