India Post GDS 2023 4th Merit List – வெளியீடு
இந்திய தபால் துறையில் (India Post) 2023 ஆம் ஆண்டுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள GDS பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களின் 04வது கட்ட மதிப்பெண் பட்டியல் ஆனது வெளியிடப்பட்டுள்ளது. இதைப் பற்றிய முழு விவரங்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.
India Post GDS 2023 4th Merit List:
இந்திய முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் GDS பிரிவின் கீழ் வரும் Gramin Dak Sevak (GDS), Branch Postmaster(BPM), Assistant Branch Postmaster (ABP) ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 30,041 காலியிடங்களுக்கான அறிவிப்பானது 02.08.2023 அன்று இந்திய தபால் துறை (India Post) மூலம் வெளியிடப்பட்டது. இப்பதவிகளுக்கு தகுதியான நபர்கள் Merit List மற்றும் Document Verification மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் இதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
IT துறையில் சாதிக்க சூப்பர் வாய்ப்பு – படித்தவுடன் வேலைவாய்ப்பு உறுதி!
இந்த வகையில் GDS 2023 பதவிகளுக்கான 1st Merit List ஆனது 06.09.2023 அன்றும், 2nd Merit List ஆனது 29.09.2023 அன்றும், 3rd Merit List ஆனது 20.10.2023 அன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 04th Merit List ஆனது 15.11.2023 அன்று https://indiapostgdsonline.gov.in/ என்ற இணைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு தேர்வு செய்யப்பட நபர்கள் தங்களது பெயரில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதி வாரியான பிரிவு தலைவர் மூலம் சான்றிதழ்களை 25.11.2023 அன்றுக்குள் சரிபார்க்க வேண்டும்.